சுகாதார திருவிழாவில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
By DIN | Published On : 02nd March 2019 07:16 AM | Last Updated : 02nd March 2019 07:16 AM | அ+அ அ- |

கமுதி அருகே பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடந்த சுகாதார திருவிழாவில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்பி. நிறைகுளத்தான் தலைமையும், துணை இயக்குநர்கள் மீனாட்சி (சுகாதாரம்), சாதிக் அலி (காசநோய் தடுப்பு) முன்னிலையும் வகித்தனர். வட்டார மருத்துவர் நாகரஞ்சித் வரவேற்றார். முகாமில் எய்ட்ஸ் கட்டுப்பாடு, ஆற்றுப்படுத்துதல், குடும்ப நல சிகிச்சையில் கருத்தடை, உணவு பாதுகாப்பு, தமிழக அரசின் விரிவான மருத்துவம், பிளாஸ்டிக் ஒழிப்பு, கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிகள் ஆகியவை நடந்தன.
நிகழ்ச்சியில் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட நல அலுவலர் ரத்தினகுமாரி, கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையர் வீரராகவன், வட்டார மருத்துவர்கள் சுகன்யா, வினோதினி, ஷீபா, அர்த்தநாரி, கார்த்திக், வட்டார மேற்பார்வையாளர் பொன்னுபாக்கியம், சுகாதார ஆய்வாளர் நாகலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.