திமுக ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 02nd March 2019 07:18 AM | Last Updated : 02nd March 2019 07:18 AM | அ+அ அ- |

விருதுநகரில் நடைபெறவிருக்கும் மண்டல மாநாடு குறித்து, கமுதி திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கமுதி திமுக வடக்கு ஒன்றிய அவைத் தலைவர் பொன்னுத்துரை தலைமை வகித்தார். மாவட்டப் பொறுப்பாளர் முத்துராமலிங்கம், வடக்கு ஒன்றியச் செயலர் வி. வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கமுதி ஒன்றியத்தில் இறந்த திமுகவினருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. விருதுநகரில் மார்ச் 6 ஆம் தேதி நடைபெறவிருக்கும் மண்டல மாநாட்டுக்கு, ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் கமுதி வடக்கு ஒன்றியத்தின் சார்பில் ஏராளமான வாகனங்களில் சென்று நிர்வாகிகள் கலந்துகொள்வது, மக்களவைத் தேர்தல், பரமக்குடி சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் திமுகவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.