தேர்தல் விதிமீறல்: ராமநாதபுரத்தில் கட்சியினர் மீது 36 வழக்குகள் பதிவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் விதியை மீறியதாக அரசியல் கட்சியினர் மீது சனிக்கிழமை வரை 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.


ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் விதியை மீறியதாக அரசியல் கட்சியினர் மீது சனிக்கிழமை வரை 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல்கள் விதிமீறல் கண்காணிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுவருகிறது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 12 ஆம் தேதி முதல் விளம்பரங்கள், கொடிக்கம்பங்கள் அகற்றுதல், அனுமதியின்றி பொது மற்றும் தனியார் சுவர்களில் கட்சித் தலைவர்கள் பெயர் எழுதியது என விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி அமமுகவினர் மீது ராமநாதபுரம் கேணிக்கரை, கமுதி, அபிராமம் ஆகிய இடங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 
கட்சி வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில், அதிக வாகனங்களில் சென்றதாக அமமுக மீது ராமநாதபுரம், கடலாடி, பார்த்திபனூர், கமுதி, பரமக்குடி ஆகிய 5 இடங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வெடிவெடித்தது உள்ளிட்ட விதிமீறலில் ஈடுபட்டதாக  அமமுக வினர் மீது மொத்தம் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  அதிமுகவினர் மீது அனுமதியற்ற விளம்பரம் வரைந்தது என பரமக்குடி, கீழக்கரை, தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளில் மொத்தம் 4 வழக்குகளும், அதிக வாகனங்களில் சென்றதாக பார்த்திபனூரில் ஒரு வழக்கு என மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 திமுகவினர் மீது விளம்பர விதி மீறல் தொடர்பாக கமுதி, கீழக்கரை பகுதிகளில் இரு வழக்குகளும், அதிக வாகனங்களில் சென்றதாக கீழக்கரையில் ஒரு வழக்கு, வெடிவெடித்ததாக பரமக்குடியில் ஒரு வழக்கு  என மொத்தம் 4 வழக்குகள் பதிவாகியுள்ளன. விளம்பர விதி மீறலாக காங்கிரஸ் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 
மேலும், மார்க்சிஸ்ட், புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லீம்லீக், மனிதநேய மக்கள் கட்சி, பகுஜன் சமாஜ்வாதி கட்சி, தமிழக முஸ்லீம் முன்னேற்றக்கழகம், நாம் தமிழர் கட்சி, எஸ்டிபிஐ, தேமுதிக ஆகிய கட்சிகள் மீது விளம்பர விதிமீறல் தொடர்பாக தலா ஒரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  அதிக வாகனங்களில் சென்றதாக இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் அக்கட்சிகளின் ஆதரவாளர்கள் மீது ஒரு வழக்கு பதிவாகியுள்ளது. 
பணம் கைப்பற்றல்: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் நடைபெற்ற வாகனச் சோதனையில் 86 க்கும் மேற்பட்ட வாகனங்களில் இருந்து ரூ.1.12 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக தேவிபட்டினத்தில் வியாழக்கிழமை (மார்ச் 22) ரூ. 9 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது. 
மேலும், அரிசி மூட்டைகள், பனியன் போன்ற ஆடைகள் உள்ளிட்ட மொத்தம் ரூ.6.93 லட்சம் மதிப்புள்ள பொருள்களும் கைப்பற்றப்பட்டதாக தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறினர். கைப்பற்றப்பட்ட பணத்தில் 20-க்கும் மேற்பட்டோரிடம் அவை திரும்ப ஒப்படைக்கப்பட்டதாகவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com