பாஜக வேட்பாளருக்கு சிவசேனை ஆதரவு

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரை, சிவசேனை கட்சி நிர்வாகிகள் திங்கள்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரை, சிவசேனை கட்சி நிர்வாகிகள் திங்கள்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரான நயினார் நாகேந்திரன், முக்கியப் பிரமுகர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார். இந்நிலையில், சிவசேனை கட்சியின் மாவட்ட இளைஞரணித் தலைவர் ஹரிதாஸ் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள், நயினார் நாகேந்திரனை சந்தித்து வாழ்த்து கூறி ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து, ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி முழுவதும் சென்று பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வெற்றிக்கு பாடுபடுவோம் என, ஹரிதாஸ் தெரிவித்தார்.  இந்நிகழ்ச்சியில், சிவசேனை மாவட்டத் தலைவர் சதீஸ், மாவட்டச் செயலர் உதயகுமார் உள்பட 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com