புனித சவேரியார் ஆலய தேர்பவனி விழா
By DIN | Published On : 06th May 2019 12:54 AM | Last Updated : 06th May 2019 12:54 AM | அ+அ அ- |

திருவாடானை அருகே ஆர் எஸ் மங்கலம் ச புனித சவேரியார் ஆலய தேர்பவனித் திருவிழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
திருவாடானை அருகே ஆர்எஸ் மங்கலம் சவேரியார் நகரில் புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இங்கு கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அன்று முதல்
நாள்தோறும் சிறப்புத் திருப்பலி, சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. மின்னொளியால் அலங்கரிக்கபட்ட தேரில் மிக்கேல் ஆண்டவர், புனித சவேரியார் தேவமாதா ஆகியோர் ஆர்.எஸ்.மங்கலம் சவேரியார் நகர் ஆலயத்தில் புறப்பட்டு ஆலயத்தை வலம் வந்தன. இதில் வட்டார அதிபர் பங்கு தந்தை கிளமன்ட் ராஜா, பங்கு தந்தை ஜெரோம் ஆகியோர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.