தென்மாவட்ட அளவிலான கபடி போட்டி: தூத்துக்குடி அணி வெற்றி

கமுதி பேரையூர் அருகே சாமிபட்டியில்  ஸ்ரீசக்திமாரியம்மன் கோயில் பொங்கல் விழா, கலையரங்கம் திறப்பு விழா,

கமுதி பேரையூர் அருகே சாமிபட்டியில்  ஸ்ரீசக்திமாரியம்மன் கோயில் பொங்கல் விழா, கலையரங்கம் திறப்பு விழா, ஆண்டு விழா கொடியேற்றம் ஆகிய முப்பெரும் விழாவை முன்னிட்டு, தென்மாவட்ட அளவிலான கபடி போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த போட்டியில், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, மதுரை மாவட்டங்களிலிருந்து 30 அணிகள் பங்கேற்றன. நாக் அவுட் முறையில் நடத்தப்பட்ட இப்போட்டியில், முதல் பரிசை தூத்துக்குடி அணியும், இரண்டாம் பரிசை சாமிபட்டி அணியும், மூன்றாம் பரிசை ஏனாதி அணியும்,  நான்காம் பரிசை கொல்லங்குளம் அணியும் வென்றன. 
வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கமும், சுழற்கோப்பையையும், கிராமத் தலைவர் தருமர், துணைத் தலைவர் ராமச்சந்திரன், செயலர் மணிமுத்து, பொருளாளர் வேல்முருகன் ஆகியோர் வழங்கினர். 
இப்போட்டிக்கான ஏற்பாடுகளை, கிராம இளைஞர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com