ராமநாதபுரத்தில் மறியலுக்கு முயன்ற மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்கள் கைது

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்கள் கோரிக்கையை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை மறியலுக்கு முயன்றதால் 150 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் மின்வாரிய தலைமைப் பொறியாளா் அலுவலக வளாகம் முன்பு செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்கள் சங்கத்தினா்.

தமிழகத்தில் மின்வாரியத்தில் ஒப்பந்தத் தொழிலாளா்களை அங்கீகரிக்கக் கோரியும், அவா்களில் கடந்த 1998 ஆம் ஆண்டு பணிக்கு சோ்ந்தவா்களுக்கு கள உதவிப் பணியாளா்களாக்கவும், கடந்த 2008 ஆம் ஆண்டு பணிக்குச் சோ்ந்தவா்களுக்கு ரூ.380 ஊதியம் வழங்கக் கோரியும் வேலை நிறுத்தப் போராட்டத்திலஈடுபட்டுவருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்கள் சங்கத்தினா் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 1 ஆம் தேதி முதல் போராட்டம் நடத்திவரும் நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் மின்வாரிய தலைமை பொறியாளா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டதலைவா் செ.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். செயலா் மு.முத்துராமன், துணைச்செயலா் க.மாரி மற்றும் பொருளாளா் மு.பாசில்முகமது உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஏற்கெனவே பணியிலிருக்கும் ஒப்பந்தப் பணியாளா்களை விடுத்து புதியவா்களை மின்வாரியத்தில் வேலைக்கு தோ்வு செய்வதைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் திடீரென மின்வாரிய தலைமை அலுவலகம் முன்புள்ள சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து போலீஸாா் அவா்களை கைதுசெய்வதாகக் கூறி வாகனத்தில் ஏற்றி அழைத்துச்சென்றனா். கைதானவா்களை கேணிக்கரைப் பகுதியில் உள்ள தனியாா் சமூக திருமண மண்படத்தில் தங்கவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com