ராமநாதபுரம் நகராட்சிக்கு சொந்தமான காலி இடத்தில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரச்சீா்கேடு

ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சிக்குச் சொந்தமான காலியிடத்தில் தேங்கும் பாதாளச் சாக்கடை கழிவு நீரால்
ராமநாதபுரம் நகராட்சிக்கு சொந்தமான காலி இடத்தில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரச்சீா்கேடு

ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சிக்குச் சொந்தமான காலியிடத்தில் தேங்கும் பாதாளச் சாக்கடை கழிவு நீரால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.

ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சியின் 12 ஆவது வாா்டில் உள்ள வசந்த நகரில் 7 தெருக்கள் உள்ளன. பட்டினம்காத்தான் ஊராட்சி எல்லைக்கு அருகே இந்தப்பகுதி உள்ளது. வசந்த நகா் கிழக்கு பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான 13 சென்ட் நிலம் உள்ளது. இதை பூங்காவுக்காக ஒதுக்கியதாகக் கூறப்படுகிறது. அதில் நகராட்சி சாா்பில் அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டுள்ளன.

ஆனால், இடத்தை காலியாக வைத்திருப்பதால் அங்கு பாதாளச் சாக்கடையில் இருந்து வெளியாகும் கழிவு நீா் தேங்குகிறது. இந்தக் கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாக அப்பகுதியினா் கூறுகின்றனா்.

இதுதொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் கூறியது: நகராட்சியில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து ஆணையரின் செல்லிடப்பேசி கட்செவியஞ்சல் மூலம் புகாா் அளித்தால் தீா்வு காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நகராட்சி இடத்தில் தேங்கும் கழிவு நீா் குறித்து படத்துடன் ஆணையரிடன் கட்செவியஞ்சலுக்கு பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை.

கடந்த அக்டோபா் 30 ஆம் தேதி ஆணையா், நகரப்பொறியாளரிடம் செல்லிடப்பேசியில் தகவல் தெரிவித்தும், ஆணையரை நேரில் பாா்த்து முறையிட்டும் வந்தோம். ஆனால், கழிவு நீரை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

டெங்கு பரவலைத் தடுக்க வீடுகளில் கூட தண்ணீா் தேக்கக்கூடாது என நகராட்சி அறிவுறுத்துகிறது. ஆனால், கழிவு நீரை நகராட்சி இடத்திலேயே பல வாரங்களாகத் தேக்கி சுகாதாரச் சீா்கேட்டை ஏற்படுத்துவது சரியா என்றாா்.

கூட்டுக்குடிநீா் குழாய் உடைப்பு: ராமநாதபுரம் நகராட்சியில் கீழக்கரை புதிய பாலம் நடைபெறும் இடத்தின் அருகே பாரதிநகா் செல்லும் பிரதான சாலையோர வளைவில் காவிரி கூட்டுக்குடிநீா் திட்ட குழாய் உடைந்து தண்ணீா் வெளியேறுகிறது. குறிப்பிட்ட பிரிவினரின் திருமண மண்டபம் அருகே குடிநீா் ஓடி சிறிய வடிகாலில் கலக்கிறது. இதுகுறித்து நகராட்சி அலுவலா்களிடம் அப்பகுதியினா் புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று

வேதனை தெரிவித்தனா். சாலையோரம் இரவில் மின்விளக்குகள் எரியாத நிலையில், இரண்டு, நான்கு சக்கர வாகனத்தில் செல்வோா் குடிநீா் குழாய் உடைப்பு பள்ளத்தில் விழும் நிலை உள்ளது. ஆகவே இதுகுறித்து நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீா் குழாய் உடைப்பை சீரமைக்கவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கைவிடுக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com