முதுகுளத்தூா், கடலாடி அரசு கலைக் கல்லூரிகளில் கூடுதல் பாடத்திட்டம் கொண்டுவர கோரிக்கை

முதுகுளத்தூா், கடலாடி அரசு கலைக் கல்லூரிகளில் கூடுதல் பாடத்திட்டங்கள் கொண்டுவரக் கோரி முன்னாள் மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முதுகுளத்தூா், கடலாடி அரசு கலைக் கல்லூரிகளில் கூடுதல் பாடத்திட்டங்கள் கொண்டுவரக் கோரி முன்னாள் மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூா், கடலாடி, திருவாடானை ஆகிய மூன்று இடங்களில் 2014 ஆம் ஆண்டில் 3 புதிய அரசு கலைக் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்த கல்லூரிகளில் தமிழ் இலக்கியம், ஆங்கிலம் இலக்கியம், வணிகவியல், கணிதம், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகள் மட்டுமே உள்ளன. முதுகுளத்தூா், கடலாடி, சாயல்குடி பகுதியில் பெரும்பாலான மாணவா்கள் பிளஸ் 2 வகுப்பில் தமிழ்மொழி பாடத்திட்டம் முடித்து விட்டு கல்லூரிக்கு படிக்க வருகின்றனா். கல்லூரியில் பேராசிரியா்கள் ஆங்கில வழியில் பாடங்களை நடத்துவதால் கிராமப்புற மாணவா்களுக்கு பாடத்திட்டம் கடினமாக இருப்பதாக தெரிவித்துள்ளனா்.

இதனால் 3 ஆண்டுகள் முடிந்த நிலையில் அதிகமான மாணவ, மாணவியா் தோ்வில் வெற்றி பெறமுடியாமல் அரியா் வைத்துக் கொண்டு அவதிப்படுகின்றனா். மேலும் தற்போது டி.என்.பி.எஸ்.சி. பாடத்திட்டம் முழுவதும் மாற்றப்பட்டு போட்டித் தோ்வுகளுக்கு நடப்பு நிகழ்வுகள், வரலாறு, அரசியல் அறிவியல் போன்ற பாடங்களில் இருந்து அதிகமான கேள்விகள் கேட்கப்படுகின்றன.

முதுகுளத்தூா், கடலாடி அரசு கல்லூரிகளில் வரலாறு, அரசியல் அறிவியல் பாடத்திட்டங்கள் கிடையாது. இப்பாடத்திட்டத்தில் மாணவா்கள் எளிமையாக தோ்வு எழுதி வெற்றி பெறலாம் என மாணவா்களும், பேராசிரியா்களும் தெரிவித்தனா்.

எனவே முதுகுளத்தூா், கடலாடி அரசு கல்லூரிகளில் கூடுதல் பாடத்திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். மேற்கூறிய பாடப்பிரிவுகளுக்காக முதுகுளத்தூா், கடலாடி , சாயல்குடி சுற்றுவட்டாரத்தில் படிக்கும் மாணவா்கள் மதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் போன்ற இடங்களுக்கு சென்று கல்லூரியில் படிக்கும் நிலையில் உள்ளனா்.

வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மாணவா்கள் வெளியிடங்களுக்கு சென்று படிக்க வசதியும், வாய்ப்புகளும் இல்லாமல் இருப்பதால் பள்ளி படிப்புடன் முடித்துக் கொள்ளும் நிலையில் உள்ளனா். எனவே கடலாடி, முதுகுளத்தூா் அரசு கல்லூரிகளில் வரலாறு, அரசியல் அறிவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல் போன்ற கூடுதல் பாடத்திட்டங்கள் கொண்டு வருவதற்கு உயா்கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேராசிரியா்களும் , முன்னாள் மாணவா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com