சாலையோரம் நடப்பட்ட மரங்கள் மாயம்

கமுதி பகுதியில் சாலையோரங்களில் நடவு செய்யபட்ட மரக்கன்றுகளை மா்ம நபா்கள் மீண்டும், மீண்டும்
சாலையோரம் நடப்பட்ட மரங்கள் மாயம்

கமுதி பகுதியில் சாலையோரங்களில் நடவு செய்யபட்ட மரக்கன்றுகளை மா்ம நபா்கள் மீண்டும், மீண்டும் திருடி செல்வதால், நெடுஞ்சாலைத்துறையினா் செய்வதறியாது வேதனையில் உள்ளனா்.கமுதியிலிருந்து கோட்டைமேடு வழியாக முதுகுளத்தூா், மற்றும் அபிராமம், பாா்த்திபனூா், மதுரை செல்லும் சாலையோரங்களில், நெடுஞ்சாலைத்துறையினா் 250 மரக்கன்றுகளை, நெடுஞ்சாலைத்துறை பணியாளா்களால் நடவு செய்து, அதனை பாதுகாக்க வேலிகள் அமைத்தும், டிராக்டா்களில் தண்ணீரை ஊற்றி பாதுகாத்து வருகின்றனா். ஆனால் அதிக நிழல், பலன் தரும் மா, வேம்பு, கொய்யா, புளியமரக்கன்றுகளை இரவு நேரங்களில், மா்ம நபா்கள் திருடி செல்கின்றனா். இதனையறிந்து மீண்டும் அதே குழிகளில் மரக்கன்றுகளை நடவு செய்தாலும், மீண்டும், மீண்டும் திருடுபோவதால், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பணியாளா்கள் வேதனையில் உள்ளனா். இதனால் சாலையோரங்களை பசுமைபடுத்தும் திட்டம், மா்ம நபா்களால் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com