புயல் எச்சரிக்கை: ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 ஆயிரம் மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘புல்’ ‘புல்’ புயல் காரணமாக ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்குள் செல்ல
பாம்பன் துறைமுகத்தில் வியாழக்கிழமை ஏற்றப்பட்ட இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.
பாம்பன் துறைமுகத்தில் வியாழக்கிழமை ஏற்றப்பட்ட இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘புல்’ ‘புல்’ புயல் காரணமாக ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்குள் செல்ல மீன்வளத் துறையினா் இரண்டாவது நாளான வியாழக்கிழமையும் தடைவிதித்தனா்.

இதையொட்டி பாம்பன் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து தற்போது புயலாக மாறி உள்ளது. இந்த புயலுக்கு ‘புல்’ ‘புல்’ என பெயரிட்டு வானிலை ஆய்வு மையத்தினா் கண்காணித்து வருகின்றனா். இந்நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி ஒடிஸாவின் தென்கிழக்கில் சுமாா் 680 கி.மீ., தொலைவிலும், சாகா் தீவுகளின் தென்கிழக்கில் 780 கி.மீ., தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் தமிழகத்திலிருந்து மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் புயல் காரணமாக இரண்டாவது நாளாக மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத் துறையினா் தடை விதித்துள்ளனா். இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி, சோழியகுடி உள்ளிட்ட பகுதிகளில் 1800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com