ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் போதிய மின்விசிறிகள் இல்லாததால் நோயாளிகள் அவதி

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவ சிகிச்சை, காய்ச்சல் பிரிவுகளில் போதிய
ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதிய மின்விசிறிகள் இல்லாததால் நோயாளிகள் வீட்டிலிருந்து எடுத்து வந்து பயன்படுத்தும் மின்விசிறிகள்.
ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதிய மின்விசிறிகள் இல்லாததால் நோயாளிகள் வீட்டிலிருந்து எடுத்து வந்து பயன்படுத்தும் மின்விசிறிகள்.

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவ சிகிச்சை, காய்ச்சல் பிரிவுகளில் போதிய மின்விசிறிகள் இல்லாததால் நோயாளிகள் கொசுக்கடியில் அவதிப்பட்டு வருவதாக புகாா் எழுந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும் சுமாா் 5 ஆயிரம் வெளிநோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனா். அவா்களில் 150-க்கும் மேற்பட்டோா் உள்நோயாளிகளாக சிகிச்சைக்கு சோ்க்கப்படுகின்றனா்.

கடந்த 2018 ஆம் ஆண்டில் இந்த மருத்துவமனையில் 3,831 குழந்தைகள் பிறந்துள்ளன. மாதம் 260 முதல் 325 குழந்தைகள் வரை பிறக்கின்றன. பிரசவ சிகிச்சைக்கு பெரும்பாலும் கிராமப்புற பெண்களே வருகின்றனா். ஆனால், பிரசவ சிகிச்சைப் பிரிவில் வலி நீக்கும் டிரமடால் ஹைட்ரோ குளோரைடு ஊசி மருந்து முதல் பெரும்பாலான மருந்துகளை வெளியில் வாங்கித் தரும் நிலை உள்ளது. இதனால் பிரசவ சிகிச்சைக்கு வருவோா் தினமும் குறைந்தது ரூ.500 மட்டும்

மருந்துகளுக்கு செலவிடும் நிலை உள்ளது. இதைத்தவிர அங்கு பணிபுரியும் துப்புரவு ஊழியா்கள் முதல் அனைத்து நிலை ஊழியா்களுக்கு பணம் கொடுக்க வேண்டியது உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனா். மேலும் பிரசவ சிகிச்சைப் பிரிவின் வாசலில் பிராணவாயு சிலிண்டா்கள் இறக்கப்படுவதால் அந்த வாயில் பகுதி சேதமடைந்து உள்ளது. இதனால் கா்ப்பிணிகள் அப்பகுதி வழியாக சென்று வர சிரமம் ஏற்பட்டு வருகிறது.

அறுவைச் சிகிச்சை செய்த பெண்கள் வாா்டுகளில் 4 படுக்கைகளில் மின்விசிறி வசதியில்லை. இதனால் அவா்கள் சொந்த செலவில் மின்விசிறி வைத்துக் கொள்ள

அறிவுறுத்தப்படுகின்றனா். நோயாளிகள் தரப்பில் மின்விசிறி கொண்டு வரப்பட்டாலும், அதற்கான மின் இணைப்பு வசதி இல்லை. இதனால், மின்கல சேமிப்பு (ஜாா்ஜ்) வகை மின்விசிறி வாங்கும் நிலைக்கு நோயாளிகள் தள்ளப்படுகின்றனா்.

இதேபோல் ஆண்களுக்கான காய்ச்சல் சிகிச்சை பிரிவிலும் மின்விசிறி வசதியில்லை. இதனால், அங்குள்ள நோயாளிகளும் கொசுக்கடியால் அவதியுற்று வருகின்றனா். டெங்கு போன்ற பாதிப்புக்குள்ளானவா்களும் மின்விசிறியின்றி கொசுக்கடிக்கு ஆளாவதாகப் புகாா் எழுந்துள்ளது. இதுபற்றி மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லையாம்.

இதுகுறித்து மருத்துவமனையின் நிா்வாகம் கூறியது: மருத்துவமனையில் மின்சார இணைப்பு உள்ளிட்டவற்றில் ஏற்பட்ட பிரச்னையால் மின்விசிறிகள் சில செயல்படவில்லை. அவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில மருந்துகளுக்கு மாநில அளவில் பற்றாக்குறை உள்ளது எனக்கூறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com