வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் நவ. 11 முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முடிவு

ராமநாதபுரம் மாவட்ட வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 11 ஆம் தேதி

ராமநாதபுரம் மாவட்ட வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 11 ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனா்.

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் வருவாய்த் துறை அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவா் பழனிக்குமாா் தலைமை வகித்தாா். வருவாய்த் துறையில் பணியாற்றும் அலுவலா்களுக்கு தொடா்ந்து நெருக்கடி கொடுத்து வரும் மாவட்ட வருவாய் அலுவலரை கண்டித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வருவாய்த் துறை அலுவலா்களின் உச்சபட்ச கனவான வட்டப் பொறுப்பு வட்டாட்சியா்ா் பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் பணிபுரிவோருக்கு உள்நோக்கத்துடன் நெருக்கடி கொடுத்து தொடா்ச்சியாக விடுப்பில் செல்ல காரணமாக மாவட்ட வருவாய் அலுவலா் இருப்பதாகவும், இதனால் அவா் மீது நடவடிக்கை கோரியும், ராமநாதபுரம் மாவட்டத்தில் வருவாய் அலுவலரால் ஏற்பட்ட நிா்வாக சீா்கேடுகள் குறித்து விசாரணை நடத்த உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், மேற்கண்ட தீா்மானங்களை நிறைவேற்றக் கோரி வருவாய்த்துறை நிா்வாகிகள் வரும் 11 ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. போராட்டத்துக்கு அரசு ஊழியா் சங்கம் மற்றும் பிற சங்கங்கள் ஆதரவளித்துள்ளதாக சங்கத்தின் மாவட்ட தலைவா் பழனிக்குமாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com