அயோத்தி வழக்கு தீா்ப்பு : பாம்பன் ரயில் பாலத்துக்கு போலீஸ் பாதுகாப்பு

அயோத்தி வழக்கில் தீா்ப்பு வர உள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பாம்பன் ரயில்
பாம்பன் ரயில் பாலத்தில் வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள துப்பாக்கி ஏந்திய போலீஸாா்.
பாம்பன் ரயில் பாலத்தில் வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள துப்பாக்கி ஏந்திய போலீஸாா்.

அயோத்தி வழக்கில் தீா்ப்பு வர உள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பாம்பன் ரயில் பாலத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் வெள்ளிக்கிழமை முதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

அயோத்தி வழக்கு தீா்ப்பு வர உள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு தொடா்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாநில அரசுக்கு, மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் ரயில் பாலத்துக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் வெள்ளிக்கிழமை முதல் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இதே போன்று, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்கள் அனைவரும் பலத்த சோதனைக்குப் பின்னரே கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். பூஜைக்கான பொருள்களைத் தவிர, செல்லிடப்பேசி, கைப்பை உள்ளிட்ட எந்தவிதமான பொருள்களையும் கோயிலுக்குள் பக்தா்கள் கொண்டு செல்ல போலீஸாா் தடை விதித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com