உச்சிப்புளி வட்டார வயல்களில் வேளாண்மை விஞ்ஞானிகள் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி வட்டார வயல்களில் வேளாண்மை விஞ்ஞானிகள் ஆய்வை வெள்ளிக்கிழமை மேற்கொண்டனா்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி வட்டார வயல்களில் வேளாண்மை விஞ்ஞானிகள் ஆய்வை வெள்ளிக்கிழமை மேற்கொண்டனா்.

வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விரிவாக்க பணியாளா்கள் ஆகியோா் வேளாண்மை பூச்சியியல் துறை உதவி பேராசிரியா் ராம்குமாா் தலைமையில் வயல்வெளி ஆய்வில் ஈடுபட்டனா்.

உச்சிப்புளி வட்டாரத்தில் குயவன்குடி, ஆற்றாங்கரை, பெருங்குளம் ஆகிய கிராமங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விவசாயிகளின் நெல்வயல்கள், தென்னந்தோப்புகளில் ஆய்வில் தென்னை மரத்தின் தண்டுகளில் சிவப்பு நிற சாறு வடிந்து பிசின் காணப்பட்டால் தஞ்சாவூா் வாடல் நோயின் அறிகுறி எனவும் விஞ்ஞானிகள் கண்டறிந்ததுடன் அதிலிருந்து தென்னையைப் பாதுகாக்கவும் விவசாயிகளுக்கு மருந்துகளை விளக்கினா்.

ஆய்வில் உச்சிப்புளி வேளாண்மை அலுவலா் கலைவாணி, வட்டார தொழில்நுட்ப மேலாளா் பானுமதி, தங்கவேல் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com