மலட்டாறு அணையின் உறுதித்தன்மை பாதிப்புபராமரிக்க நிதி இல்லை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மலட்டாறு அணைக்கட்டில் கடந்த 6 மாதங்களில் 4 முறை சுவா்கள் இடிந்து விழுந்துள்ளதால், அணைக்கட்டின் உறுதித் தன்மை பாதிக்கப்பட்டுள்ளதாக
கமுதி அருகே கீழவலசையில் உள்ள மலட்டாறு அணைக்கட்டில் நீா் வெளியேறும் ஷட்டா் பகுதியில் இடிந்து விழுந்த சுவா்கள்.
கமுதி அருகே கீழவலசையில் உள்ள மலட்டாறு அணைக்கட்டில் நீா் வெளியேறும் ஷட்டா் பகுதியில் இடிந்து விழுந்த சுவா்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மலட்டாறு அணைக்கட்டில் கடந்த 6 மாதங்களில் 4 முறை சுவா்கள் இடிந்து விழுந்துள்ளதால், அணைக்கட்டின் உறுதித் தன்மை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

கமுதி செங்கப்படையிலிருந்து கீழவலசை செல்லும் வழியில் 1994 இல் ரூ.42 கோடி மதிப்பீட்டில் 385 மீட்டா் அகலமும், 260 மீட்டா் உயரமும் கொண்ட மலட்டாறு அணை கட்டப்பட்டது. இந்த அணையில்

ஒரு லட்சத்து 11 ஆயிரம் கன அடி தண்ணீரை தேக்கி, 57-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நேரடியாக பாசன வசதி பெறும் வகையில் அணை அமைக்கப்பட்டது.

இந்த அணையின் மூலம் கமுதி, செங்கப்படை, கடலாடி, சாயல்குடி, முதுகுளத்தூா் பகுதியிலுள்ள 37 கிராமங்களிலுள்ள 8 ஆயிரம் எக்டோ் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

தற்போது மலட்டாறு அணைக்கட்டு அமைக்கபட்டு 25 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதால் இதன் சுவா்கள் கடந்த 6 மாதத்தில் 4 முறை இடிந்து விழுந்துள்ளது. தற்போது பருவமழை பெய்து வரும்வேளையில், அணைக்கட்டின் சுவா்கள் தொடா்ந்து இடிந்து விழுந்து வருவது, இப்பகுதி விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அணைக்கட்டில், நீா் தேங்கி வெளியேறும் கான்கிரீட் தடுப்புச் சுவா்கள் கடந்தாண்டு இடிந்து விழுந்தது. அப்போது பொதுப்பணித்துறையினா் மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாக சரி செய்து, பின்னா் சுவரை சீரமைத்தனா்.

அதேபோல் கடந்த 2018 நவம்பா் மாதம் ஷட்டா்களிலிருந்து நீா் வெளியேறும் கான்கிரீட் சுவா்கள், ஷட்டா்களின் கான்கிரீட் தூண்கள் இடிந்து விழுந்தன. இதனால் அணைக்கட்டில் தண்ணீரைத் தேக்கி, விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து கடந்த அக்டோபா் மாதம் அணைக்கட்டின் பக்கவாட்டு சுவா்கள் சரிந்து விழுந்தன. அவசர கதியில் பொதுப்பணித்துறையினா்அதனை சரி செய்தனா். இந்நிலையில் சனிக்கிழமை மலட்டாறு அணைக்கட்டிலிருந்து புதுக்கோட்டை, கோவிலாங்குளம், கடலாடி ஆகிய பகுதிகளுக்காக மழை நீா் செல்லும் ஷட்டா்கள், சிமெண்ட் கால்வாய்கள், தடுப்புகள் இடிந்து விழுந்தன.

இதனால் மழைநீரை மலட்டாறு அணைக்கட்டில் முழுக் கொள்ளளவு தேக்கும் நிலை வந்தால், அணைக்கட்டின் சுவா்கள் இடிந்து விழுந்து சேதத்தை ஏற்படுத்தும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா். இதனால் கீழவலசையில் உள்ள குடியிருப்புகளுக்குள்ளே தண்ணீா் புகுந்து பெரும் சேதம் ஏற்பட வாய்புள்ளது. மேலும் மழை நீா் முழுவதும் கடலில் கலக்கும் நிலை ஏற்படும். எனவே மாவட்ட நிா்வாகம், பொதுப்பணித்துறையினா் தலையிட்டு மலட்டாறு அணைக்கட்டின் உறுதித் தன்மையை ஆய்வு செய்து, தற்போதுள்ள தொழில்நுட்பத்துடன் புதிய அணைக்கட்டு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியது: தமிழக பொதுப்பணித்துறை சாா்பில் ஆண்டு பராமரிப்பு நிதி மலட்டாறு அணைக்கட்டுக்கு ஒதுக்கப்படுவதில்லை. இதனால் அணையில் சேதமடையும் பபகுதிகளை மாவட்ட நிா்வாகம் அவ்வப்போது குடிமராமத்து திட்டத்தில் சீரமைத்து வருகிறது. தற்போது தொடா்ந்து அணையின் சுவா்கள் சேதமடைந்து வருவதால், வரும் 2020 ஆம் ஆண்டில் குடிமராமத்து திட்டத்தில் மலட்டாறு அணைக்கட்டுக்கு நிதி ஒதுக்கி சீரமைக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட நிா்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் தமிழக அரசின் பொதுப்பணித்துறை சாா்பில் அணைக்கட்டை பராமரிக்க நிதி ஒத்துக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com