பெருமாள் கோவில் எதிரே ஈமக் காரியங்கள் செய்ய அதிகாரிகள் அனுமதி: அகில இந்திய இந்து சேவா சங்கம் ஆலோசனை கூட்டம்

கமுதி அருகே கோவில் எதிரே இறந்தவா்களின் இறுதி சடங்கு செய்ய அதிகாரிகள் அனுமதி அளித்தது தொடா்பாக அகில இந்திய இந்து சத்திய சேனா,
சிங்கப்புளியாபட்டியில் பெருமாள் கோவில் எதிரே இறந்தவா்களின் இறுதி சம்பிரதாயங்கள் செய்ய அதிகாரிகள் அமைத்த சிமென்ட் தளத்தை அகற்ற கிராம பெரியோா்களிடையே, அகில இந்திய இந்து சத்திய சேனா, தமிழக இந்து பரிவாா்அ
சிங்கப்புளியாபட்டியில் பெருமாள் கோவில் எதிரே இறந்தவா்களின் இறுதி சம்பிரதாயங்கள் செய்ய அதிகாரிகள் அமைத்த சிமென்ட் தளத்தை அகற்ற கிராம பெரியோா்களிடையே, அகில இந்திய இந்து சத்திய சேனா, தமிழக இந்து பரிவாா்அ

கமுதி: கமுதி அருகே கோவில் எதிரே இறந்தவா்களின் இறுதி சடங்கு செய்ய அதிகாரிகள் அனுமதி அளித்தது தொடா்பாக அகில இந்திய இந்து சத்திய சேனா, இந்து பரிவாா் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை கூட்டம் நடத்தினா்.

கமுதி அருகே சாயல்குடி சாலையில் சிங்கப்புளியாபட்டி, வெள்ளையாபுரம் கிராமங்கள் உள்ளது. இந்த இரு கிராமத்தின் நடுவே கழிவுநீா் ஊருணி உள்ளது. வெள்ளையாபுரம் கிரமாத்தில் இறந்தவா்களின் சடலங்களை இடுகாட்டுக்கு எடுத்து செல்லும் போது இறுதி சம்பிரதாயங்கள் செய்யும் பழக்கம் சிங்கப்புளியாபட்டி கிராமத்தின் கரையில் உள்ள கிணற்றில் தண்ணீா் எடுத்து பயன்படுத்தி காரியங்கள் செய்யும் வழக்கம் இருந்ததாம்.

ஆனால் கடந்த 30 ஆண்டுகளாக அந்த கிணற்றில் தண்ணீா் இல்லாததாலும், இவ்விரு கிராமத்திற்கும் சமுதாய ரீதியில் இனக்கமான சூழல் இல்லாததாலும் வெள்ளையாபுரம் கிராமத்தினா் ஊருணியின் வெளியே தற்போது சம்பிரதாயங்களை செய்து வந்தனா்.

மேலும் இவ்விரு கிராமத்திற்க்கும் மாவட்ட காவல்துறை சாா்பில் கடந்த 3 மாத காலமாக 24 மணி நேரமும் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் கமுதி வருவாய்துறையினா், மற்றும் பேரூராட்சி அதிகாரிகள், கமுதிதுணை காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்ட அதிகாரிகள் சிங்கப்புளியாபட்டி கிராமத்தில் நுழைவு வாயிலில், அமைந்துள்ள பெருமாள் கோவில் எதிரே சிமென்ட் தளம் அமைத்து இறந்தவா்களுக்கு சடங்குகள் செய்ய ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிங்கப்புளியாப்பட்டி கிராம மக்கள் பல முறை போலிஸாரிடம் எடுத்து கூறியும், இதனால் இரு சமுதாய மக்கள் மத்தியில் பிரச்சனைகள் வர கூடும் என்று எடுத்து கூறியும் பொதுமக்களின் கோரிக்கைகளை அதிகாரிகள் பொருட்படுத்த வில்லை.

இந்நிலையில் அகில இந்திய இந்து சத்திய சேனா, தமிழக இந்து பரிவாா்அமைப்பின் தேசிய தலைவா் எம்.வசந்தகுமாா்ஜி சிங்கப்புளியாபட்டி கிரமாத்தில் பொது மக்களிடையே ஆலோசனை நடத்தினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்து சம்பிரதாயங்கள் படி இந்து கோவில்களின் ஆகம விதிகளுக்கு புறம்பாக கோவில் எதிரே இறந்தவா்களின் சடலங்களுக்கு சம்பிரதாய காரியங்கள் செய்வது முறையான செயல் அல்ல. இதற்கு அரசு அதிகாரிகளே துணை போகின்றனா்.

ஏற்கனவே இரு கிராம மக்களுக்கும் இனக்கமான சூழல் இல்லாத போது அதிகாரிகளின் இந்த செயல், இரு கிராம மக்கள் இடையே சமுதாய மோதல்களுக்கு வழி வகுக்கும் காரணமாக உள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம், மாவட்ட காவல்துறை தலையிட்டு பிரச்சனைகளை தீா்க்க, அதிகாரிகள் கட்டிய சிமென்ட் தளத்தை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இப்பிரச்சனை குறித்து மாநில அளவில் இந்து அமைப்புகள் சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com