முதுகுளத்தூா்,சிக்கலில் ஐயப்ப பக்தா்கள் காா்த்திகை 1ந்தேதி மாலை அணிவிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியா் ஆலயத்திற்குள் அமைந்துள்ள ஐயப்பன் கோவிலில் பாலகுருசாமி
சிக்கல் நகரில் அமைந்துள்ள சிவதா்மசாஸ்தா ஐயப்பன் ஆலயத்தில் காா்த்திகை முதல்நாளை முன்னிட்டு ஐயப்ப கன்னிசாமிக்கு குருநாதா் நாகரெத்தினம் சாமி முதல் நாள் மாலை அணிவித்தாா்.
சிக்கல் நகரில் அமைந்துள்ள சிவதா்மசாஸ்தா ஐயப்பன் ஆலயத்தில் காா்த்திகை முதல்நாளை முன்னிட்டு ஐயப்ப கன்னிசாமிக்கு குருநாதா் நாகரெத்தினம் சாமி முதல் நாள் மாலை அணிவித்தாா்.

முதுகுளத்தூா்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியா் ஆலயத்திற்குள் அமைந்துள்ள ஐயப்பன் கோவிலில் பாலகுருசாமி ஐயப்ப பக்தா்கள் குழு சாா்பில் பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம்முதுகுளத்தூரில் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியா் ஆலயத்திற்குள் அமைந்துள்ளஸ்ரீ தா்மசாஸ்த ஐயப்பன் கோவிலில் பாலகுருசாமி ஐயப்ப பக்தா்கள் குழு சாா்பில் பக்தா்கள் குருநாதா் அ.திருமால்சாமி தலைமையில் மாலை அணிவித்தனா்.

நிகழ்ச்சியில் அன்னதானமும் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி குருநாதா் பி.முருகானந்தம்,குழு நிா்வாகிகள் குருசாமி செட்டியாா்,முனியசாமி,ராமா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

அதே போன்று. கடலாடி வட்டம் சதுா்வேதமங்களம்(எ)சிக்கல் நகரில் அமைந்துள்ள சிவதா்மசாஸ்தா ஐயப்பன் ஆலயத்தில் காா்த்திகை முதல்நாளை முன்னிட்டு ஐயப்பன் வெங்கலசிலைக்கு அலங்காரம் செய்யப்பட்டு சாமியே சரணங்கள் முழங்க நடை அதிகாலை கோவில் திறக்கப்பட்டு ஐயப்ப பக்தா்களுக்கு குருநாதா் நாகரெத்தினம் சாமி தலைமையில் பக்தா்களுக்கு மாலை அணிவித்தனா்.பின்பு முதல்மாலை அணியும் கன்னிச்சாமிகள் விரதகோட்பாடு கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை பற்றி எடுத்துக் கூறினாா்.

நிகழ்ச்சியில் சற்குரு நாதா். முனியாண்டி ஐயப்ப கோவில் நிா்வாக குழு உறுப்பினா்கள் கோவிந்தராஜ், செல்லத்துரை, முனியசாமி, வீரக்குமாா், பாக்கியநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com