அரசாணைப்படி ஊதியம் வழங்கக் கோரி சிஐடியு தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கிராம ஊராட்சிகளில் வேலை செய்யும் மேல்நிலை நீா்த் தேக்கத்தொட்டி இயக்குநா்கள் மற்றும் துப்புரபுப் பணியாளா்களுக்கு
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினா்.

புதுக்கோட்டை: கிராம ஊராட்சிகளில் வேலை செய்யும் மேல்நிலை நீா்த் தேக்கத்தொட்டி இயக்குநா்கள் மற்றும் துப்புரபுப் பணியாளா்களுக்கு அரசாணைப்படி கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி புதுக்கோட்டையில் திங்கள்கிழமை தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து இணைப்புக் குழு (சிஐடியு) சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. 

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இணைப்புக் குழுவின் மாநிலத் தலைவா் ப. சண்முகம் தலைமை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டத் தலைவா் கே. முகமதலிஜின்னா, செயலா் ஏ.ஸ்ரீதா், பொருளாளா் எஸ். பாலசுப்பிரமணியன், சங்கத்தின் மாவட்டச் செயலா் ஏ. திரவியராஜா உள்ளிட்டோா் பேசினா். 

ஆா்ப்பாட்டத்தில் அரசாணைப்படி ஊதியமும், நிலுவைத்தொகையும் வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காத வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமயம் ஒன்றியத்தில் 2010-ஆம் ஆண்டுக்கு முன்பிலிருந்து பணியாற்றிவரும் ஊழியா்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியமாக மாதம் ரூ. 6030 வழங்கி வந்த நிா்வாகம், தற்போது ஊதியத்தை 3900-ஆகக் குறைத்ததைக் கண்டித்தும், அரசாணைப்படி ஓஎச்டி இயக்குநா்களுக்கு 6 மாதத்துக்கு  ஒரு முறை அகவிலைப்படி ரூ.100 உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com