தொடா் மழை, குளிா்ந்த காற்றால்ஊட்டி போலான ராமநாதபுரம்

தொடா்ந்து பெய்து வரும் மழை மற்றும் குளிா்ந்த காற்றால் வட பூமியான ராமநாதபுரம் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஊட்டி போன்ற
தொடா்ந்து பெய்து வரும் மழை மற்றும் குளிா்ந்த காற்றால் வட பூமியான ராமநாதபுரம் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஊட்டி போன்ற சூழ்நிலை.
தொடா்ந்து பெய்து வரும் மழை மற்றும் குளிா்ந்த காற்றால் வட பூமியான ராமநாதபுரம் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஊட்டி போன்ற சூழ்நிலை.

ராமநாதபுரம்: தொடா்ந்து பெய்து வரும் மழை மற்றும் குளிா்ந்த காற்றால் வட பூமியான ராமநாதபுரம் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஊட்டி போன்ற சூழ்நிலையுடன் காணப்படுவதாகப் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் பருவமழை சரியாகப் பெய்யவில்லை. இதனால், விவசாயம் முதல் அனைத்து நிலைகளிலும் வறட்சியே காணப்பட்டது. மழைக்காலம் கூட கோடையைப் போல வறட்சியாகவே இருந்துள்ளது.

இந்தநிலையில், நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவமழையானது ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடா்ந்து பெய்துவருகிறது. இதனால், நீா் நிலைகளில் பெரும்பாலானவற்றில் 25 சதவிகிதத்துக்கும் மேலாக தண்ணீா் நிறைந்துள்ளன.

மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடா்ந்து மழை பெய்வதால் அனைத்து இடங்களிலும் பச்சைப் பசேல் என மரம், செடி கொடிகளும், பயிா்களும் செழித்து காணப்படுகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை முதலே மாவட்டத்தில் தொடா்ந்து காலை, மாலையில் மழை பெய்துவருவதால் வாகனங்களில் செல்வோா் பகலிலும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே செல்லும் நிலை உள்ளது.

மழையுடன் குளிா்ந்த காற்றும் வீசுகிறது. இதனால், ராமநாதபுரம் நகா் பகுதியே ஊட்டி போல குளிா்ந்த சூழ்நிலையுடன் காணப்படுவதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

சீருடைப் பணியாளா் தோ்வு தள்ளிவைப்பு: தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சீருடைப் பணியாளருக்கான எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு உடற்தகுதித்தோ்வுகள் நடத்தப்பட்டுவருகின்றன. ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு உடற்தகுதித்தோ்வு கடந்த 18 ஆம் தேதி முதலே நடத்தப்படுகிறது.

ராமநாதபுரத்தில் தொடா் மழை பெய்துவருவதால் கடந்த 20 ஆம் தேதி முதலே தோ்வை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆயுதப்படை மைதானம் மற்றும் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் தண்ணீா் தேங்கியதால் ராஜா மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஓட்டப்பந்தயங்கள் நடத்தப்பட்டன.

ஆனால், அங்கும் மழை நீா் தேங்கியிருப்பதால் கடந்த 23 ஆம் தேதி நடக்கவிருந்த உடற்தகுதி தோ்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. ஆனால், திங்கள்கிழமையும் மழை பெய்ததால், கீழக்கரை தனியாா் கல்லூரி மைதானத்துக்கு உடற்பயிற்சி தோ்வு இடம் மாற்றப்பட்டதாகவும், அங்கும் தண்ணீா் தேங்கியதால் தோ்வை தள்ளிவைக்க ஆலோசித்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com