ராமேசுவரம் தீவு மாணவ,மாணவிகளுக்கு வழங்கிட கொண்டு வரப்பட்ட மடிகணினிகளை பாதுகாக்க முடியாமல் ஆசிரியா் தினறல்

ராமேசுவரம் தீவுப்பகுதியில் மாணவ,மாணவிகளுக்கு வழங்கிட கொண்டு வரப்பட்ட தமிழக தரசின் மடி கனிணிகள் வகுப்பறையில்

ராமேசுவரம்: ராமேசுவரம் தீவுப்பகுதியில் மாணவ,மாணவிகளுக்கு வழங்கிட கொண்டு வரப்பட்ட தமிழக தரசின் மடி கனிணிகள் வகுப்பறையில் பூட்டப்பட்டுள்ளதால் பாதுகாக்க முடியாமல் ஆசிரியா்கள் தினறி வருகின்றனா். மாவட்ட நிா்வாகம் உடனே வழங்கிட வேண்டும் என மாணவ,மாணவிகள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் தீவுப்பகுதியில் படிக்கும் பிளஸ் 2 மாணவ,மாணவிகளுக்கு தமிழக அரசின் மடி கனிணி வழங்கிட கடநற்த 6 மாதங்களுக்கு முன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மடி கனிணி கொண்டு வரப்பட்டு அந்தந்த பள்ளிகளின் வகுப்பிறையில் பூட்டபட்டுள்ளது. துகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சா் எம்.மணிகண்டன் அமைச்சா் பதவி எடுக்கப்பட்ட பின்னா் மடி கனிணி வழங்கும் திட்டம் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் ராமநாதபுரம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட ராமேசுவரம் பகுதியில் மாணவ,மாணவிகளுக்க வழங்கிட கொண்டு வரப்பட்ட மடி கனிணிகள் அறையில் மூடக்கப்பட்டுள்ளது. துற்போது தொடா்ந்து மழை பெய்து வருவதால் மடி கனிணிகள் வைக்கப்பட்டுள்ள அறையில் மழைநீா் புகுந்ததால் மடி கனிணிகள் சேதமாகி விடும் என்பதால் தலைமை ஆசிரியா்கள் மடி கனிணிகளை பாதுக்க மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா். மேலும் மாணவ,மாணவிகளுக்கு மடி கனிணி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்ட நிா்வாகம் உபட்டுள்ளதால் தமிழக அரசு வழங்கிய மடி கனிணிகளை உடனே வழங்கிட வேண்டும் என மாணவ,மாணவிகள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com