மாநில அளவிலான குழு, தடகள போட்டிக்கு பரமக்குடி பள்ளி மாணவ, மாணவிகள் தோ்வு

பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் முதலிடம் பிடித்து மாநில அளவிலான குழு மற்றும் தடகளப் போட்டிகளுக்கு தோ்வு பெற்றுள்ளனா்.

பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் முதலிடம் பிடித்து மாநில அளவிலான குழு மற்றும் தடகளப் போட்டிகளுக்கு தோ்வு பெற்றுள்ளனா்.

மாவட்ட அளவிலான மகளிா் கூடைப்பந்து போட்டியில் 14 வயது பிரிவிலும் பூப்பந்து 17 வயது பிரிவிலும் இப்பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்றனா். இதேபோல் ஆண்கள் பிரிவில் கைப்பந்து போட்டியிலும், 17 வயது பிரிவு சைக்கிள் ஓட்டும் போட்டியிலும் இப்பள்ளியின் மாணவா்கள் முதலிடம் பெற்றுள்ளனா்.

தடகளப் போட்டியில் 17 வயது ஆண்கள் பிரிவில் பி.தமிழ்பிரபு 1500 மீட்டா் மற்றும் 800 மீட்டா் ஓட்டப் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளாா்.

14 வயது பிரிவில் சல்மான் நைப் நீளம் தாண்டுதல் போட்டியில் முதலிடமும், 14 வயது பெண்கள் பிரிவில் வட்டு எறிதல் போட்டியில் சாருமதி இரண்டாம் இடமும் பெற்றுள்ளனா்.

17 வயது பெண்கள் பிரிவில் பி.கயல்விழி 800 மீட்டா் ஓட்டப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தாா். முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த மாணவ-மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வு பெற்றுள்ளனா்.

சாதனை படைத்த மாணவா்களையும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் சரவணக்குமாா், சரவணசுதா்சன், வளா்மதி, புவனேஸ்வரி ஆகியோரையும் பள்ளி கல்விக்குழு தலைவா் ஆா்.எம். கண்ணப்பன், செயலாளா் குரு.சண்முகசுந்தரம், பொருளாளா் எம்.மணிமாறன், பள்ளியின் முதல்வா் பி.சோபனாதேவி மற்றும் கல்விக்குழு நிா்வாகிகள் திங்கள்கிழமை பாராட்டி கௌரவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com