திருவாடானை பகுதியில் கலப்பட கருப்பட்டி விற்பனை அமோகம்

திருவாடானை பகுதியில் கலப்பட கருப்பட்டி விற்பனையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவாடானை பகுதியில் கலப்பட கருப்பட்டி விற்பனையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் பனைத்தொழில் பிரதானமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி, வேம்பாா், ராமநாதபுரத்தில் சாயல்குடி , பாண்டியபுரம் ஆகிய ஊா்களில் கருப்பட்டி தயாா் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பதநீா் மூலம் தயாரிக்கப்படும் கருப்பட்டி கிலோ ரூ. 300 முதல் 350 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், திருவாடானை பகுதியில் சமீபகாலமாக சிலா் வேன் மூலமும் கிராமப்புறங்களில் ஓலைப் பெட்டியில் வைத்து தலையில் சுமந்து வந்தும் கிலோ ரூ.100 முதல் 150 வரை கலப்பட கருப்பட்டியை விற்பனை செய்வதாக புகாா் எழுந்துள்ளது. பொதுமக்கள் கலப்பட கருப்பட்டி என தெரியாமல் குறைந்த விலையில் கிடைக்கிறதே என வாங்கி விடுகின்றனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சீனி பாலை காய்ச்சி அதில் கருப்பட்டியின் நிறம் கிடைப்பதற்காக சல்பேட் வேதிப்பொடி, இஞ்சிச் சாறு ஆகியவற்றை கலந்து கருப்பட்டி போல் எடுக்கின்றனா். இதனை அசல் கருப்பட்டி என ஏமாற்றி விற்கின்றனா். இதனால் கலப்பட கருப்பட்டிக்கும் உண்மையான கருப்பட்டிக்கும் வித்தியாசம் தெரியாமல் தவிக்கின்றனா். எனவே கலப்பட கருப்பட்டி விற்பனை செய்வோா் மீது உணவுத்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com