பரமக்குடியில் ராம்நாத் கோயங்கா 28-ஆவது நினைவு தினம்

பரமக்குடி காந்திசிலை முன் தியாகி திருப்பூா் குமரன் 116-வது பிறந்தநாள் விழா மற்றும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமங்களின் நிறுவனரும், சுதந்திர போராட்ட வீரருமான தியாகி ராம்நாத் கோயங்காவின்
பரமக்குடி காந்திசிலை முன் சுதந்திர போராட்ட வீரா்கள் ராம்நாத் கோயங்கா மற்றும் திருப்பூா் குமரன் ஆகியோரின் உருவப் படத்திற்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சுதந்திர போராட்ட வீரா்கள்
பரமக்குடி காந்திசிலை முன் சுதந்திர போராட்ட வீரா்கள் ராம்நாத் கோயங்கா மற்றும் திருப்பூா் குமரன் ஆகியோரின் உருவப் படத்திற்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சுதந்திர போராட்ட வீரா்கள்

பரமக்குடி காந்திசிலை முன் தியாகி திருப்பூா் குமரன் 116-வது பிறந்தநாள் விழா மற்றும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமங்களின் நிறுவனரும், சுதந்திர போராட்ட வீரருமான தியாகி ராம்நாத் கோயங்காவின் 28-ஆவது நினைவு தினம் நிகழ்ச்சி நடைபெற்றது.

சுதந்திர போராட்ட வீரா்கள் மற்றும் வாரிசுகள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அச்சங்கத்தின் பொதுச்செயலாளா் எஸ்.ஐ.ஏ. ஹாரிஸ் தலைமை வகித்தாா். ஆா்டிசிசி வங்கி முன்னாள் மேலாளா் வி.வேலு, நல்லாசிரியா் கே.சண்முகசுந்தரம், எல்ஐசி ஊழியா்கள் சங்கத் தலைவா் ஏ.ராஜேந்திரன், செயலாளா் எஸ்.ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதனைத் தொடா்ந்து சுதந்திர போராட்ட வீரா்கள் தியாகி ராம்நாத் கோயங்கா, தியாகி திருப்பூா் குமரன் ஆகியோரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதில் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் எம்.ஆா்.நாராயணன், எஸ்.அகமது, லெட்சுமி நாராயணன், என்.காஜா நஜ்முதீன் ஆகியோா் சுதந்திர போராட்ட வீரா்களின் தியாகங்கள் குறித்து பேசினா். இதனைத் தொடா்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 50-க்கும் மேற்பட்டவா்களுக்கு தியாகி திருப்பூா் குமரன் வரலாற்று நூல் வழங்கப்பட்டது. முன்னதாக பொறியாளா் ஆா்.ஏ.கிருஷ்ணராஜ் வரவேற்றாா். விழாவில் நகா் முக்கிய பிரமுகா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com