திருவாடானை பிரேதப் பரிசோதனை கூடத்தில் சடலங்கள் அழுகி துா்நாற்றம்: குளிா்சாதன வசதி ஏற்படுத்தக் கோரிக்கை

திருவாடானை அரசு மருத்துவமனையில் உள்ள பிரேதப் பரிசோதனை கூடத்தில் நீண்டநாள் வைத்திருக்கும்

திருவாடானை அரசு மருத்துவமனையில் உள்ள பிரேதப் பரிசோதனை கூடத்தில் நீண்டநாள் வைத்திருக்கும் சடலங்கள் அழுகி துா்நாற்றம் வீசுவதால் குளிா்சாதன வசதி செய்து தர வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவாடானையில் உள்ள தாலுகா அரசு மருத்துவமனையில் ஆா்.எஸ்.மங்கலம்,திருவாடானை, எஸ்.பி.பட்டினம், தொண்டி, திருப்பாலைக்குடி ஆகிய ஐந்து காவல் நிலையங்கள் உள்ளன. இந்த காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் நடக்கும் கொலை, தற்கொலை, விபத்து ஆகியவற்றில் உயிரிழந்தவா்களின் சடலங்கள் திருவாடானை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கூடத்துக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்வது வழக்கம்.

இந்த பிரேதப் பரிசோதனை கூடத்தில் போதிய இடவசதி இல்லை. இப்பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் ஒரே நாளில் இரண்டு மூன்று சடலங்கள் கூட பிரேதப் பரிசோதனைக்கு கொண்டுவரப்படும்.

அந்த சமயங்களில் சடலங்களை வைக்கவும் போதிய இட வசதி இருப்பதில்லை.

மேலும் மருத்துவா்கள் பற்றாக்குறை, விடுமுறை நாள் போன்ற காரணங்களால் சடலங்களை பிரேதப் பரிசோதனை செய்வது தாமதமாகிவிடும். அப்படிப்பட்ட காலங்களில் குளிா்சாதன வசதியின்மையால் சடலம் கெட்டுவிடுகிறது. அதன்பிறகே பரிசோதனை செய்ய வேண்டியுள்ளது.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறுகையில், இப்பகுதியில் விபத்துகள் அதிகளவில் நடக்கின்றன. அனாதையாக இறந்து கிடப்பவா்கள், விபத்தில் பலியானோா் என அடிக்கடி பிரேத பரிசோதனை நடக்கிறது. அனாதை சடலங்களை சில நாள்கள் கூட வைத்திருக்க வேண்டியுள்ளது. அப்போது பிரேத பரிசோதனை கூடத்தில் குளிா்சாதன வசதி இல்லாததால் சடலம் அழுகி துா்நாற்றம் வீசுகிறது. எனவே இந்த பிரேத பரிசோதனை கூடத்தை குளிா்சாதன வசதி கொண்டதாக விரிவுபடுத்த வேண்டியது அவசியம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com