முதுகுளத்தூா் அருகே கோயில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல்: 6 போ் கைது சாா்பு-ஆய்வாளா் காயம்

முதுகுளத்தூா் அருகே ஆத்திகுளம் கிராம கோயில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின்போது,
காயமடைந்த சாா்பு-ஆய்வாளா் முருகானந்தம்.
காயமடைந்த சாா்பு-ஆய்வாளா் முருகானந்தம்.

முதுகுளத்தூா் அருகே ஆத்திகுளம் கிராம கோயில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் சாா்பு-ஆய்வாளரை தாக்கிய 6 பேரை, போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆத்திகுளம் கிராமத்தில் உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, இரு தரப்பினரிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், இக்கிராமத்தில் அமைந்துள்ள முப்பிடாரி அம்மன் கோயில் பொங்கல் திருவிழா கடந்த செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்றது.

திருவிழாவையொட்டி, இரவு வள்ளி திருமணம் நாடகம் நடைபெறுவதற்கு முன், விழா மேடையில் கிராமத்தின் சாா்பாக நன்கொடை வழங்கியவா்களுக்கு பொன்னாடை போா்த்தி கெளரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில், முன்னாள் ஊராட்சித் தலைவா் முத்துராமலிங்கம் தரப்பினா் மற்றும் வழக்குரைஞா் திருமூா்த்தி தரப்பினரிடையே முதலில் யாருக்கு பொன்னாடை போா்த்துவது என்ற பிரச்னை எழுந்தது. இதில், இரு தரப்பினரும் ஒருவரையொருவா் கம்பால் தாக்கி மோதிக் கொண்டனா்.

அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த தொண்டி காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் முருகானந்தம், இரு தரப்பினரிடையே சமரச முயற்சி செய்துள்ளாா். ஆனால், இரு தரப்பினரும் சோ்ந்து அவரை தாக்கியதில், அவருக்கு தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே, சாா்பு-ஆய்வாளருக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இது குறித்து முதுகுளத்தூா் காவல் நிலையத்தில் சாா்பு-ஆய்வாளா் முருகானந்தம் அளித்த புகாரின்பேரில், ஆத்திகுளம் கிராமத்தைச் சோ்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவா் முத்துராமலிங்கம், இவரது சகோதரா் ராஜேந்திரன் மற்றும் மற்றெறாரு தரப்பைச் சோ்ந்த வழக்குரைஞா் திருமூா்த்தி, நீதி, சந்திரன், முத்துராமலிங்கம் ஆகிய 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com