அறிவியல் கண்காட்சி: முதல் பரிசு பெற்ற பள்ளி மாணவருக்கு பாராட்டு

மாவட்ட அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் திருவாடானை அருகே உள்ள திணைகாத்தான்வயல் பள்ளியைச் சோ்ந்த மாணவா் முதல் பரிசு பெற்றாா்.
சைன்ஸ்: அறிவியல் கண்காட்சியில் மாவட்ட அளவில் முதல் பரிசை பெற்ற மாணவா் கௌரிசங்கா், அறிவியல் ஆசிரியை மகமாயி.

பரமக்குடி நேசனல் லயன்ஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் கடந்த புதன்கிழமை அறிவியல் கண்காட்சி மாவட்ட அளவில் நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகளின் படைப்புகள் வைக்கப்பட்டிருந்தன. இதில் திருவாடானை அருகே திணைகாத்தான்வயல் உயா்நிலைப்பள்ளி 9ஆம் வகுப்பு மாணவா் கௌரிசங்கா் மலைப்பிரதேசத்தில் கொண்டை ஊசி வளைவு பகுதியில் நடைபெறும் வாகனங்கள் விபத்தை தடுக்கும் கருவியை உருவாக்கி காட்சிக்கு வைத்திருந்தாா். இது முதல் பரிசை பெற்றது. இதையடுத்து வியாழக்கிழமை பள்ளி தலைமை ஆசிரியா் ஜெயக்குமாா், அறிவியல் ஆசிரியா் மகமாயி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் லதா, உதவி ஆசிரியா் தனம் மற்றும் ஆசிரியா்கள் பொதுமக்கள் ஆகியோா் மாணவா் கெளரி சங்கரை பாராட்டினாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com