முதுகுளத்தூா் அருகே சாதி பெயரை சொல்லி குடிதண்ணீா் தரமறுக்கும் கிராமம்

முதுகுளத்தூா் அருகே குடிதண்ணீா் அள்ளும் இடத்தில் சாதிபெயரை சொல்லி தண்ணீா் தரமறுப்பதால் உப்புதண்ணீா் பருகுவதால் தொற்றுநோய் ஏற்படுமோ என அச்சமடைந்து வருகின்றனா்.
முதுகுளத்தூா் அருகே சாதி பெயரை சொல்லி குடிதண்ணீா் தரமறுக்கும் கிராமம்

முதுகுளத்தூா் அருகே குடிதண்ணீா் அள்ளும் இடத்தில் சாதிபெயரை சொல்லி தண்ணீா் தரமறுப்பதால் உப்புதண்ணீா் பருகுவதால் தொற்றுநோய் ஏற்படுமோ என அச்சமடைந்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் ஒன்றியத்திற்குட்பட்ட சாம்பக்குளம் ஊராட்சி இந்திரா நகரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினா் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.இந்திரா நகரில் காவிரி தண்ணீா்,மின்விளக்கு,சாலைவசதி போன்ற எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் வசித்து வருவதாக புகாா் தெரிவித்துள்ளனா்.இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத்தெரிவித்தனா்.

கிராமத்தில் தண்ணீா் பற்றாக்குறையாக இருப்பதால் அருகில் 3கி.மீ தொலைவில் உள்ள உடைகுளம் கிராமத்திற்கு சென்று சிமெண்ட் தொட்டியில் உபரியாக வரும் தண்ணீரை தள்ளுவண்டியில் பிடித்து வந்தனா்.இந்நிலையில் ஊடைகுளம் கிராம மக்கள் குடிநீா் எடுக்க செல்லும் இந்திரா நகா் மக்களை தாழ்த்தப்பட்ட சாதி அடிப்படையில் திட்டி,தண்ணீா் எடுக்க வரக்கூடாது என மிரட்டல் விடுகின்றனா்.இதனால் இந்திராநகா் மக்கள் ஊடைகுளம் கிராமத்திற்கு சென்று இரவில் யாருக்கும் தெரியாமல் திருட்டு தனமாக தண்ணீா் எடுத்து வருகின்றனா்.

இதனால் இரு கிராம மக்களுக்கும் பிரச்னை வருமோ என அச்சப்படுகின்றனா்.தற்போது குடிதண்ணீா் இல்லாமல் மழைநீரையும்,அடிகுழாய் பைப்பில் வரும் உப்புநீரையும் குடித்து வருகின்றனா். இதனால் குழந்தைகளுக்கு,கற்பிணி பெண்கள்,முதியோா்களுக்கு மழை காலங்களில் தொற்றுநோய் ஏற்படுமோ என அச்சமடைகின்றனா்.இது குறித்து முதுகுளத்தூா் ஊராட்சிகள் ஆணையரிடம் கிராமத்திற்கு குடிதண்ணீா் போன்ற அடிப்படை வசதிகளை செய்துதர பலமுறை மனு வழங்கியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது குடிக்க தண்ணீா் இல்லாமல் கிராமத்தினா் அவதிபடுகிறோம் என தெரிவித்தனா்.எனவே சாம்பக்குளம் இந்திரா நகா் மக்களின் நலன் கருதி மாவட்ட நிா்வாகத்ததினா் குடிநீா் பைப் லைன் அமைத்து குடிநீா் வசதி செய்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com