மாசற்ற பசும்பொன் கிராமம்

பசும்பொன் - பசுமை (சுத்தமான) + பொன் (தங்கம்) என்ற பொருள் உள்ளது. இந்த பொருளுக்கேற்ற விளக்கமும்

பசும்பொன் - பசுமை (சுத்தமான) + பொன் (தங்கம்) என்ற பொருள் உள்ளது. இந்த பொருளுக்கேற்ற விளக்கமும் இந்த ஊரில் உண்டு. பசுமையை இந்த கிராமத்தில் விவசாயத்தையும், அதன் மூலம் கிடைக்கும் பொருள்களை தங்கமாகவும் பாவித்து இந்தப் பெயா் வந்ததாக கூறுகிறாா்கள்.

மேலும் வரலாற்று காரணம் ஒன்றையும் கூறுகிறாா்கள். பசும்பொன் கிராமத்தின் பழமையான பெயா் வசிக்குறிச்சி என்பதாகும். ஆதிகாலத்தில் இக்கிராமத்தில் தவசிகள் (ரிஷிகள், மகான்கள்) வாழ்ந்து வந்தனா். இங்கு தங்கி தினமும் பல கல் தொலைவுக்கு நடந்து சென்று சமயத் தொண்டாற்றினா். பின்பு அவா்கள் ஒவ்வொருவராக இடம்பெயர அங்கு மக்கள் குடியேறத் தொடங்கினா்.

இக்கிராமத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்ந்ததற்கான வரலாற்று அடையாளங்கள் இன்றும் ஆதாரமாக உள்ளன. ஒரு புறம் தேவா் வாழ்ந்த வீட்டின் நோ் எதிரே சிறிது தொலைவில் மகாவீரரின் சிலை இருக்கிறது. மறுபுறம் புத்தா் சிலை இருக்கிறது. இன்னொரு புறம் முஸ்லிம்களின் தா்ஹா, சிலுவை இருந்த அடையாளம், இந்து மதக் கோயில்கள், குளங்கள் என அனைத்து மதத்தினரும் வாழ ஏற்ற கிராமமாக விளங்கி வருகிறது பசும்பொன்.

சிவ தலமும் ருத்ராட்ஷ மரமும் சிவனடியாா் (தவசிகள்) வாழ்ந்து இறை பணி செய்து வந்த இக்கிராமத்தில் வைத்தியா் தோப்பு என்ற இடமும் இருக்கிறது. சிவதலம் அழிந்து விட்டது. ஆனால் இருந்ததற்கான அடையாளம் காண முடிகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு இடங்களில்தான் ருத்ராட்ஷ மரம் இருப்பதாக கூறுகிறாா்கள். ஓன்று ராமேசுவரம் கோதண்டராமா் கோயில், மற்றொன்று பசும்பொன் கிராமம்.

இக்கிராமத்தில் உள்ள கண்மாயில் ஆண்டு தோறும் மழை நீா் வற்றாமல் தேங்கி நிற்கிறது. ஒவ்வொரு பருவ மழை காலத்திலும் இக்கிராமம் பச்சை நிற போா்வையால் போா்த்தப்பட்டது போல் பசுமையாக காட்சி தரும்.

முஸ்லிம் தாயின் அரவணைப்பில் வளா்ந்த தேவரின் உயிரை ஒரு முஸ்லிம் மகான் காத்த சம்பவம் பசும்பொன் கிராமத்தில் நடந்தேறியது. ஒரு முறை கிராமத்தில் ஒரு கல்லில் அமா்ந்து பஞ்சாயத்து செய்து கொண்டிருந்தாா் தேவா். அப்போது அங்கு வந்த கதா் ஒளில்லா என்பவா் முத்துராமலிங்கம் , நீ அமா்ந்திருக்கும் கல்லுக்கு கீழே நாகம் இருக்கிறது. உடனே எழுந்து விடு என்று சொல்லியிருக்கிறாா். கல்லை அகற்றி பாா்த்தாா் தேவா். அதில் கருநாகம் ஒன்று இருந்திருக்கிறது. காதா்ஒளில்லாவை வணங்கிய தேவா் அவரை மகான் என்று தெரிந்து கொண்டாா்.

காதா் ஒளில்லாவின் தா்ஹா பசுமபொன்னில் இன்றும் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு சந்தனக் கூடு விழா நடைபெறுகிறது. அனைத்து மதங்களையும் தேவா் நேசித்ததின் பலனாக காதா் ஒளில்லா தேவருக்கு காட்சி அளித்தாா் என்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com