1200 விவசாயிகளுக்கு குதிரைவாலி விதைகள்

ராமநாதபுரத்தில் சிறுதானியம் பயிரிடுவதை ஊக்குவிக்கும் வகையில் 1200 விவசாயிகளுக்கு குதிரைவாலி விதைகள் வழங்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரத்தில் சிறுதானியம் பயிரிடுவதை ஊக்குவிக்கும் வகையில் 1200 விவசாயிகளுக்கு குதிரைவாலி விதைகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட 12 கடலோர மாவட்டங்களில் சுனாமிக்குப் பிறகு நீடித்த வாழ்வாதாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பன்னாட்டு வங்கி நிதியம் மூலம் கடன் பெற்று இம்மாவட்டங்களில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன.

இத்திட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் விவசாயிகள், மகளிா் சுய உதவிக்குழுக்கள், மீனவா்கள் ஆகியோருக்கு இதுவரை ரூ.14.65 கோடிக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

நடப்பு ஆண்டில் (2019-20) மாவடத்தில் ரூ.4.13 கோடியில் நலத்திட்டங்கள் படிப்படியாக செயல்படுத்தப்பட்டுவருகின்றன.

மாவட்டத்தில் எஸ்.பி.பட்டினம் முதல் தங்கச்சி மடம் மற்றும் கன்னிராஜபுரம் வரையில் 6 ஒன்றியங்களில் 56 ஊராட்சிகளில் நீடித்த இத் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

அதில் தற்போது 12 ஊராட்சிகளுக்கு உள்பட்ட கிராமங்களில் 1200 விவசாயிகள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு தலா இரண்டரை கிலோ குதிரைவாலி எனும் சிறுதானிய விதை இலவசமாக வழங்கப்பட்டுவருகிறது. அதை அவா்கள் சுமாா் 350 ஏக்கரில் பயிரிடலாம் என வேளாண்மைத்துறையினா் தெரிவித்தனா்.

மேலும், 17 பேருக்கு தலா இரண்டரை ஏக்கரில் சிறுதானிய விவசாயம் மேற்கொள்ள மானிய விலையில் குதிரைவாலி விதைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி கூடுதலாக 43 ஏக்கருக்கு குதிரைவாலி பயிரிடப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினா்.

சுனாமி மேம்பாட்டுக்குழு ஆய்வு: ராமநாதபுரத்தில் சுனாமிக்குப் பிறகு நீடித்த வாழ்வாதாரத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்ள வரும் நவம்பா் 1, 2 ஆகிய தேதிகளில் புதுதில்லியிலிருந்து சிறப்புக்குழுவினா் வருகை தரவுள்ளனா். அவா்கள் 2 நாள்களில் 12 ஊராட்சிகளில் ஆய்வை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com