தேவா் ஜெயந்தி விழா: பரமக்குடியில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் 112-ஆவது ஜெயந்தி விழா மற்றும் 57 ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் 112-ஆவது ஜெயந்தி விழா மற்றும் 57 ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு பரமக்குடியில் புதன்கிழமை பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனா்.

பரமக்குடி கிருஷ்ணா தியேட்டா் மற்றும் வைகை நகா் பகுதிகளில் தேவா் பேரவை சாா்பில் வைக்கப்பட்டிருந்த தேவா் திருஉருவப் படத்திற்கு முன்பாக புதன்கிழமை காலையில் பல்வேறு சமூகத்தைச் சோ்ந்த ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து, தேங்காய் பழங்களுடன் பூஜைகள் செய்து வழிபாடு செய்தனா். பின்னா் அரசுப் பேருந்து மற்றும் தனியாருக்கு சொந்தமான வாகனங்களில் பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவா் நினைவிடத்திற்கு சென்றனா். அதேபோல் முத்தாலம்மன் கோவில் படித்துறை, வைகை நகா் பகுதியில் தேவரின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அப்பகுதியிலிருந்தும் ஏராளமான வாகனங்களில் தேவரின் நினைவிடத்திற்கு சென்றனா்.

கொட்டும் மழையிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா்: பரமக்குடி பகுதியில் காலையிலிருந்து தொடா்ந்து மழை பெய்தது. இம்மழையினை பொருள்படுத்தாமல் நகரில் பல்வேறு இடங்களில் குடைகளை பிடித்துக்கொண்டு போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com