கோட்டைவாசல் விநாயகர் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

ராமநாதபுரத்தில் உள்ள கோட்டைவாசல் விநாயகர் கோயிலுக்கான கும்பாபிஷேகத்தின் மூன்றாம் கால யாகசாலைப்

ராமநாதபுரத்தில் உள்ள கோட்டைவாசல் விநாயகர் கோயிலுக்கான கும்பாபிஷேகத்தின் மூன்றாம் கால யாகசாலைப் பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன. இதையடுத்து வியாழக்கிழமை காலை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானதுக்கு பாத்தியமான கோட்டைவாசல் விநாயகர் கோயில் ராஜவீதியில் அமைந்துள்ளது. கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அங்கு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (செப். 10) காலை முதல் யாகசாலைகள் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகத்துக்கான பூஜைகள் தொடங்கின.
புனித நீர் அடங்கிய கும்பங்கள் யாகசாலைகளில் வைத்து பூஜைகள் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை முதல் கால யாகசாலைப் பூஜைகள் தொடங்கிய நிலையில், புதன்கிழமை மாலை மூன்றாம் கால யாகசாலைப் பூஜைகள் நிறைவடைந்தன. இந்நிலையில், வியாழக்கிழமை நான்காம் கால யாகசாலைப் பூஜைகள் நிறைவடைந்ததும் காலை 8 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெறுகிறது. பின்னர் காலை 8.15 மணிக்கு மேல் கோயில் விமானத்தில் யாகசாலைப் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம நடத்தப்படுகிறது. அதன்பின்னர் மூலஸ்தானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா அபிஷேகம் நடத்தப்படும். கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை சமஸ்தான திவான் மற்றும் நிர்வாகச் செயலர் கே.பழனிவேல்பாண்டியன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com