பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிர்வுத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

சமூக நலத்துறையின் பெண் குழந்தைகள் பழைய பாதுகாப்புத் திட்டத்தில், போக்குவரத்து வளர்ச்சி நிதிக்கழகத்தில் வைப்பீடு செய்தவர்கள் (1991 முதல் 2001 வரை), 18 வயது பூர்த்தியடைந்திருந்தால்  முதிர்வுத்தொகை


சமூக நலத்துறையின் பெண் குழந்தைகள் பழைய பாதுகாப்புத் திட்டத்தில், போக்குவரத்து வளர்ச்சி நிதிக்கழகத்தில் வைப்பீடு செய்தவர்கள் (1991 முதல் 2001 வரை), 18 வயது பூர்த்தியடைந்திருந்தால்  முதிர்வுத்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக  செய்திக்குறிப்பு விவரம்: தமிழக அரசு கடந்த 1991 ஆம் ஆண்டு சமூக நலத்துறையின் கீழ் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்தியது. அதன்படி திட்டத்தில் சேர்ந்து போக்குவரத்து வளர்ச்சி நிதிக்கழகத்தில் வைப்பீடு செய்திருப்பவர்கள், அந்த பெண் குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியடைந்திருந்தால் அதற்கான முதிர்வுத் தொகையை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்காக தங்களிடம் உள்ள அசல் வைப்புத்தொகை ரசீதுவுடன், மாவட்ட சமூக நல அலுவலகம் அல்லது சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலக சமூக நல விரிவாக்க அலுவலரிடம் ஒப்படைத்து முதிர்வுத்தொகை பெறலாம். 
அசல் வைப்புத்தொகை ரசீது இல்லாதவர்கள், வைப்புத்தொகை ரசீது நகலுடன் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு அசல் வைப்புத் தொகை ரசீது பெற்று முதிர்வுக்கு அனுப்ப வேண்டும். 
இதில் பழைய திட்டப் பயனாளிகள் மட்டும் பயன்பெற முடியும். புதிய திட்டமான தமிழ்நாடு மின்விசைப் பயனாளிகள் இதில் விண்ணப்பிக்க முடியாது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com