ராமநாதபுரம் ராஜ ராஜேஸ்வரி கோயில் நவராத்திரி கலைத் திருவிழா தொடக்கம்

தென்னகத்து தசரா என்று அழைக்கப்படும் ராமநாதபுரம் அரண்மனை விலாசத்தில் நவராத்திரி கலைத் திருவிழா சனிக்கிழமை சிறப்புப் பூஜையுடன் தொடங்கியது. 


தென்னகத்து தசரா என்று அழைக்கப்படும் ராமநாதபுரம் அரண்மனை விலாசத்தில் நவராத்திரி கலைத் திருவிழா சனிக்கிழமை சிறப்புப் பூஜையுடன் தொடங்கியது. 
கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெறும் தசராவுக்கு அடுத்தபடியாக ராமநாதபுரம் சமஸ்தானம் சார்பில் நடைபெறும் நவராத்திரி கலைத் திருவிழா பிரசித்தி பெற்றது.
இங்கு நடப்பாண்டில் கலைத் திருவிழாவை முன்னிட்டு ராமலிங்க விலாசம் மற்றும் ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோயில் என அனைத்து இடங்களும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. 
இதையடுத்து சனிக்கிழமை காலையில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் பன்னீர், பால் உள்ளிட்ட திரவியங்களால் க்கு அம்மனுக்கு மஹா அபிஷேகம் நடந்தது. மாலையில் ராஜா குமரன் சேதுபதி இல்லத்தில் அமைக்கப்பட்ட கொலுவை கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிறப்பு பூஜைகள் நடத்தி தொடங்கி வைத்தார். அதன்பின்னர் ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோயிலில், நவராத்திரி கலை விழாவையும், லிங்க வடிவில் அமைக்கப்பட்ட கொலுவையும், காமாட்சிபுரி ஆதீனம் தொடங்கி வைத்தார். கலை திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக ராமலிங்க விலாசம் முன்பகுதியில் அமைந்த கலையரங்கில் ராமநாதபுரம் சேதுசமஸ்தான வித்வான் எஸ்.பி.சிவகுமார் குழுவினரின் மங்கள இசை நிகழ்ச்சி நடைபெற்றது. 
ஞாயிற்றுக்கிழமை மாலையில் திருவிளக்குப் பூஜையும், கே.என்.மஞ்சுநாத் பட்டரின் லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனையும் நடைபெறுகிறது. அம்மன் தங்க கேடயத்துடன், வெள்ளி காமதேனு வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com