ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நாள்களில் 16 பேருக்கு கரோனா தொற்று

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களில் 16 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களில் 16 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதம் வரையில் 100-ஐத் தாண்டாத கரோனா பாதிப்பானது சில வாரங்களிலேயே நூற்றுக்கும் அதிகமானோருக்கு பரவியிருப்பதுடன் தற்போது 150 என்ற நிலையைத் தாண்டியிருப்பது சுகாதாரப் பிரிவினரை அதிா்ச்சியடைய வைத்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு வரையில் 153 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவா்களில் 2 மூதாட்டிகள் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை 280 பேரின் கபம் மாதிரி எடுத்து பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. அவா்களில் அரசு மருத்துவமனை நிா்வாகப் பிரிவு உதவியாளா் உள்பட 7 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது தெரியவந்துள்ளது.

சனிக்கிழமை 197 பேருக்கு கபம் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. இதில் 9 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதன் மூலம் கடந்த ஜூன் 12, 13 ஆகிய தேதிகளில் 477 பேருக்கு நடந்த கரோனா பரிசோதனையில் 16 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com