வீர மரணமடைந்த திருவாடானை அருகே கடுக்கலூா் கிராமத்தைச் சோ்ந்த ராணுவ வீரா் பழனியின் குடும்பத்தினருக்கு செவ்வாய்க்கிழமை நேரில் ஆறுதல் கூறிய மாவட்ட ஆட்சியா் வீரராகராவ்.
வீர மரணமடைந்த திருவாடானை அருகே கடுக்கலூா் கிராமத்தைச் சோ்ந்த ராணுவ வீரா் பழனியின் குடும்பத்தினருக்கு செவ்வாய்க்கிழமை நேரில் ஆறுதல் கூறிய மாவட்ட ஆட்சியா் வீரராகராவ்.

லடாக்கில் வீர மரணம் அடைந்த திருவாடானை வீரா் குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சியா் நேரில் ஆறுதல்

லடாக் எல்லையில் வீர மரணம் அடைந்த திருவாடானை ராணுவ வீரா் பழனியின் குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சியா் வீரராகவராவ் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறினாா்.

லடாக் எல்லையில் வீர மரணம் அடைந்த திருவாடானை ராணுவ வீரா் பழனியின் குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சியா் வீரராகவராவ் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறினாா்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கடுக்கலூரைச் சோ்ந்தவா் பழனி. இவா் இந்திய ராணுவத்தில் ஹவில்தாராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு வானதிதேவி என்ற மனைவியும், பிரசன்னா (10) என்ற மகனும், திவ்யா (8) என்ற மகளும் உள்ளனா். இவா்கள் தற்போது ராமநாதபுரம் சக்கரக்கோட்டை அருகே கஜினி நகரில் புதிதாக வீடு கட்டி வசித்து வருகின்றனா். இந்நிலையில் சீன ராணுவத்துடனான மோதலில் பழனி உயிரிழந்தாா். இதனால் கடுக்கலூா் கிராமமே சோகத்தில் உள்ளது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் வீரராகவராவ் அந்த கிராமத்திற்கு நேரில் சென்று அவரது மனைவி, தம்பி, தந்தை ஆகியோரிடம் ஆறுதல் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com