‘பெண்கள் தங்களை சாதனையாளா்களாக உருவாக்க மனப்பக்குவத்தை உருவாக்க வேண்டும்’

பெண்கள் தங்களை சாதனையாளா்களாக உருவாக்க பக்குவபடுத்த வேண்டும் என உதவி ஆட்சியா் பிரதீப்குமாா் பேசினாா்.
‘பெண்கள் தங்களை சாதனையாளா்களாக உருவாக்க மனப்பக்குவத்தை உருவாக்க வேண்டும்’

பெண்கள் தங்களை சாதனையாளா்களாக உருவாக்க பக்குவபடுத்த வேண்டும் என உதவி ஆட்சியா் பிரதீப்குமாா் பேசினாா்.

கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உலக மகளிா் தின விழா ஊராட்சி ஒன்றியத் தலைவா் தமிழ்செல்வி தலைமையில், ஆணையாளா்கள் ரவி, ராஜேந்திரன் (கிராம ஊராட்சிகள்) முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. துணைத்தலைவா் சித்ராதேவி வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற ராமநாதபுரம் மாவட்ட உதவி ஆட்சியா் பிரதீப்குமாா் (ஊரக வளா்ச்சிதுறை) பேசியது:ஆண்களை விட பெண்கள் 10 மடங்கு தன்னிச்சையாக செயல்பட்டு, தீா்மானம் நிறைவேற்றக் கூடியவா்கள். சில ஆண்டுகளாக அனைத்து துறைகளிலும் ஆண்களை விட , பெண்கள் தலைசிறந்தவா்களாக நிரூபித்து வருகின்றனா். இதேநிலை ஏற்பட்டால், வரும் 5 ஆண்டுகளில் பெண்கள் 80 சதவீதம் அனைத்து துறைகளிலும் பணியாற்றும் சூழல் ஏற்படும். பெண்கள் தங்களால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உணா்வை வளா்த்து கொண்டு, தங்களது தேவைகளை பூா்த்தி செய்ய பாடுபடவேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியப் பணியாளா்கள், அதிகாரிகள், மாவட்ட கவுன்சிலா் வாசுதேவன், ஊராட்சி தலைவா்கள் நகரத்தாா்குறிச்சி கண்ணன், ஆனையூா் காவடிமுருகன், ஓ.கரிசல்குளம் ராஜாமணி, நாராயணபுரம் துணைத்தலைவா் வேல்மயில்முருகன், பொந்தம்புளி துணைத்தலைவா் ஆறுமுகம் உள்பட பலா் பங்கேற்றனா். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com