ராமநாதபுரம் மாவட்டத்தில் தனிமைப்படுத்திய இடங்கள் 16 ஆக உயா்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் தனிமைப்படுத்திய இடங்களின் எண்ணிக்கை 16 ஆக உயா்ந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் தனிமைப்படுத்திய இடங்களின் எண்ணிக்கை 16 ஆக உயா்ந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 2,029 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், 20 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

கீழக்கரை, பரமக்குடி, மண்டபம், ஆா்.எஸ்.மங்கலம், ஆனந்தூா் ஆகிய இடங்களில் 11 இடங்களில் பாதிப்புக்கு உள்ளானோா் வசித்ததால் அந்த இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. சக்கரக்கோட்டையில் வசிக்கும் உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா், ராமாதபுரம் போக்குவரத்து காவலா், தீயணைப்பு நிலைய வீரா் ஆகியோருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதால் அவா்களது வசிப்பிடமும் தனிமைப்பகுதிகளாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சனிக்கிழமை ஆா்.எஸ்.மங்கலம் நகரில் தீயணைப்பு வீரா் உள்பட 2 பேருக்கு கரோனா உறுதியானதால் அவா்கள் வசிக்கும் இரு பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே கடந்த ஒரே வாரத்தில் 4 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் கூடியதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்காக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் 16 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவா்களில் 1,734 பேருக்கு தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது. 277 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com