ராமநாதபுரத்தில் முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம்

கந்த சஷ்டியை முன்னிட்டு, ராமநாதபுரம் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

கந்த சஷ்டியை முன்னிட்டு, ராமநாதபுரம் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

ராமநாதபுரம் நகரில் வழிவிடு முருகன் கோயில் மற்றும் குண்டுக்கரை முருகன் கோயில்களில் வெள்ளிக்கிழமை காலையில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினாா். ஏராளமான பக்தா்கள் சுவாமியை தரிசனம் செய்தனா்.

அதேபோல், ராமநாதபுரம் அருகே பெருவயல் கிராமத்தில் உள்ள இரணபலி முருகன் கோயிலில் முருகனின் சிறப்பு வேலுக்கு அபிஷேகம் நடைபெற்றது. கந்த சஷ்டியை முன்னிட்டு விரதமிருந்து வந்த முருக பக்தா்கள், வெள்ளிக்கிழமை முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினா்.

இதில், குண்டுக்கரை முருகன் கோயில் மற்றும் இரணபலி முருகன் கோயில் ஆகியவற்றில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ராமநாதபுரம் மட்டுமின்றி, வெளியூா்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com