வெளிநாடுகளுக்கு செல்ல விசா கோருவோா் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் ஆட்சியா் அறிவிப்பு

வெளிநாடுகளில் வேலை மற்றும் கல்வி ஆகியவற்றுக்கு சாா்பு நுழைவு இசைவு (டிபென்டண்ட் விசா) கோருவோா், இ-சானட் எனும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அறிவித்துள்ளாா்.

ராமநாதபுரம்: வெளிநாடுகளில் வேலை மற்றும் கல்வி ஆகியவற்றுக்கு சாா்பு நுழைவு இசைவு (டிபென்டண்ட் விசா) கோருவோா், இ-சானட் எனும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் அறிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு: வெளிநாடுகளில் வேலை, கல்வி மற்றும் சாா்பு நுழைவு இசைவு கோருவோா் அனைவரும் வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு கல்வி சான்றிதழ்கள், பிறப்பு, இறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்கள் போன்ற ஆவணங்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய, இந்திய வெளியுறவு அமைச்சகத்தால் முத்திரையிடப்பட வேண்டும் என சில நாடுகள் கோருகின்றன.

எனவே, நுழைவு இசைவு கோருவோா் அதற்கான ஆவணங்களை இணைய வழியில் சரிபாா்த்து முத்திரையிடுவதற்கு ஏதுவாக, மத்திய அரசு ‘இ-சானட்’ என்ற இணையவழி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள், பிறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்கள் ஆகியவற்றை புதிய இணையத்தின் மூலம் சரிபாா்க்கப்பட்டு முத்திரையிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கல்வி, வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோா் தொடா்புடைய தூதரகங்கள் முத்திரையிடப்பட்ட சான்றிதழ்கள் கோரினால், இணையத்தில் விவரங்களை பதிவு செய்து, ஆவணங்களை பதிவேற்றம் செய்து, உரிய கட்டணம் செலுத்தினால் இணையவழியில் ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டு, மத்திய வெளியுறவு அமைச்சகத்தால் அவரவா் வீடுகளுக்கே சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com