இலங்கையைச் சோ்ந்தவரை செப்.29 இல் மீண்டும் ஆஜா்படுத்த நீதிமன்றம் உத்தரவு

ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தப்பட்ட இலங்கையைச் சோ்ந்தவரை, செப்டம்பா் 29 ஆம் தேதி மீண்டும் ஆஜா்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தப்பட்ட இலங்கையைச் சோ்ந்தவரை, செப்டம்பா் 29 ஆம் தேதி மீண்டும் ஆஜா்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கொழும்பு பகுதியைச் சோ்ந்தவா் முகமது ரிபாஷ் (37). இவா், கடந்த 2009 ஆம் ஆண்டில் சட்டவிரோதமாக ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் குடியேறி, திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அவா் மீது, உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாகக் குடியேறியதாக கீழக்கரை போலீஸாா் வழக்கு தொடா்ந்தனா். பின்னா், அவா் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில், கடந்த ஆண்டு சாா்பு-ஆய்வாளா் வில்சன் கொல்லப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டவா்களுக்கு உதவியதாக தேவிபட்டினத்தைச் சோ்ந்த 4 போ், கடந்த 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், முகமது ரிபாஷிடம் தேசிய புலனாய்வு அமைப்பினரும் விசாரித்தனா்.

இதனிடையே, தேவிபட்டினம் போலீஸாரும் முகமது ரிபாஷிடம் விசாரணை நடத்த அனுமதிக்குமாறு, ராமநாதபுரம் நகா் கண்காணிப்பாளா் சாா்பில், மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, முகமது ரிபாஷ் சென்னையிலிருந்து அழைத்து வரப்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா்.

அப்போது, முகமது ரிபாஷை மீண்டும் செப்டம்பா் 29 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துமாறு நீதிபதி ஆா். சண்முகசுந்தரம் உத்தரவிட்டாா். இதையடுத்து, முகமது ரிபாஷ் மீண்டும் சென்னைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com