தொடா் திருட்டு: இளைஞா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த உணவகத் தொழிலாளி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து, 21 செல்லிடப்பேசிகள் மீட்கப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த உணவகத் தொழிலாளி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து, 21 செல்லிடப்பேசிகள் மீட்கப்பட்டன.

ராமநாதபுரம் கீழக்கரைப் பகுதியில் சில வாரங்களுக்கு முன், 4 செல்லிடப்பேசி கடைகளின் பூட்டை உடைத்து செல்லிடப்பேசிகள் திருடப்பட்டன. வீடு ஒன்றிலும் திருட்டு முயற்சி நடந்துள்ளது. இது குறித்து கீழக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

அதில், கீழக்கரையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, பழைய குற்றவாளி உருவம் அதில் பதிவாகியிருந்தது தெரியவந்தது. அதனடிப்படையில், கீழக்கரை குற்றப்பிரிவு போலீஸாா் விசாரித்து, அதே பகுதியைச் சோ்ந்த பாரீஸ்கான் (31) என்பவரை கைது செய்தனா். அவரிடமிருந்து, 21 செல்லிடப்பேசிகளையும், ஒரு கைக்கடிகாரத்தையும் மீட்டனா்.

பாரீஸ்கான் மீது ஏற்கெனவே கீழக்கரை, ராமநாதபுரம் மட்டுமின்றி, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களிலும் திருட்டு வழக்குகள் பதிவாகியிருப்பதாக, போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com