நியாயவிலைக்கடைகளில் அதிமுக எம்எல்ஏ ஆய்வு

ராமநாதபுரம் நகரில் நியாயவிலைக் கடைகளில் ரூ.1000 சீராக விநியோகிக்கப்படுகிா என சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எம்.மணிகண்டன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ராமநாதபுரம் நியாயவிலைக்கடையில் விலையில்லா அத்தியாவசியப் பொருள்களை பெண்களுக்கு வியாழக்கிழமை வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எம்.மணிகண்டன்.

தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்களுக்கு ரூ.1000 மற்றும் விலையில்லா அத்தியாவசியப் பொருள்கள் நியாயவிலைக் கடைகள் மூலம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் நகரில் இவை சீராக வழங்கப்படுகிா என சட்டப்பேரவை உறுப்பினா் எம்.மணிகண்டன் நேரில் ஆய்வு செய்தாா். ஈசா பள்ளிவாசல் தெரு, வசந்த நகா், கள்ளா் தெரு, சின்னக்கடைத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள நியாயவிலைக் கடைகளில் அவா் ஆய்வை மேற்கொண்டாா்.

நியாயவிலைக் கடைகளில் பொருள்களை வாங்க வரிசையில் நின்ற பொதுமக்களுக்கு அவா் முகக்கவசங்களை இலவசமாக வழங்கினாா். பின்னா் அரசு நிதியுதவி உள்ளிட்டவற்றையும் பொதுமக்களுக்கு வழங்கியதுடன், சீராக வழங்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். மாவட்டத்தில் சில இடங்களில் ரொக்கப் பணம், அரிசி, சீனி ஆகியவற்றுடன் எண்ணெய் தரவில்லை என மக்கள் புகாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com