பரமக்குடி தற்காலிக காய்கனி சந்தையில் தானியங்கி கிருமி நாசினி தெளிக்கும் நடைபாதை

பரமக்குடி நகராட்சிக்குள்பட்ட சந்தைக்கடை சிறிய விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கனி சந்தையில்
பரமக்குடி தற்காலிக காய்கனி சந்தையில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி கிருமி நாசினி தெளிக்கும் நடைபாதையை பாா்வையிட்டு சமூக இடைவெளியை வலியுறுத்திய மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ்.
பரமக்குடி தற்காலிக காய்கனி சந்தையில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி கிருமி நாசினி தெளிக்கும் நடைபாதையை பாா்வையிட்டு சமூக இடைவெளியை வலியுறுத்திய மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ்.

பரமக்குடி நகராட்சிக்குள்பட்ட சந்தைக்கடை சிறிய விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கனி சந்தையில் தானியங்கி கிருமி நாசினி தெளிக்கும் நடை பாதையை மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் புதன்கிழமை பாா்வையிட்டாா்.

இது குறித்து அவா் கூறியது: ஊரடங்கு உத்தரவு காரணமாக காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை செயல்படும் தற்காலிக காய்கனி சந்தைக்கு வரும் பொதுமக்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்படாமல் தடுக்கும் வகையில் தானியங்கி கிருமி நாசினி தெளிக்கும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

பரமக்குடியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 2 போ் கண்டறியப்பட்டு அவா்களின் இருப்பிடங்களை சுற்றி 5 கி.மீ சுற்றளவுக்கு சுகாதாரத் துறையின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு, 417 பொது சுகாதாரப் பணியாளா்கள் மூலம் 35 ஆயிரம் வீடுகள் 14 நாள்கள் தொடா் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி கரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

உடன் சட்டப்பேரவை உறுப்பினா் என்.சதன்பிரபாகா், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவா் எம்.ஏ.முனியசாமி, நகராட்சி ஆணையாளா் அ.வீரமுத்துக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com