முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
ராமேசுவரத்தில் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் முன்பு மீனவர்கள் காத்திருப்பு போராட்டம்
By DIN | Published On : 03rd August 2020 01:50 PM | Last Updated : 03rd August 2020 01:50 PM | அ+அ அ- |

மீனவர்கள் போராட்டம்
ராமேசுவரத்தில் சிறுதொழிலில் செய்யும் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களை பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ள இரட்டைமடி, சுருக்குமடி வலைகளை பயன்படும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கும் மீன்வளத்துறையை கண்டித்து மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் முன்பு மீனவர்கள் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.
ராமேசுவரம் தீவுவில் 20 மீன்பிடி கிராமங்கள் உள்ளது. இந்த பகுதியில் உள்ள பாரம்பரிய மீனவர்கள் சிறுதொழில் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி, சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி விசைப்படகுகள் கரையோரம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 20 கிராமங்களை சேர்ந்த சிறு தொழில் மீனவர்கள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர்.
இதனால் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி, சுருக்கமடி வலைகளை பயன்படுத்தும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல முறை மீன்வளத்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனை கண்டித்து, 20 மீனவ கிராமங்களில் உள்ள சிறு தொழில் மீனவர்களை பாதுகாக்க தடை செய்யப்பட்டுள்ள இரட்டைமடி, சுருக்குமடி வலைகளை பயன்படுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கும் மீன்வளத்துறையை கண்டித்து ராமேசுவரம் தீவு அனைத்து நாட்டுப்படகு மற்றும் சிறு தொழில் மீனவர்கள் மற்றும் கடல் தொழிலாளர் சங்கம் சி.ஐ.டி.யு சங்கம் சர்பில் ராமேசுவரம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவகத்திற்கு பேரணியாக வந்து முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டம் மாவட்ட தலைவர் ஜஸ்டீன். தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.கருணாமூர்த்தி மற்றும் கிராமத்தலைவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.