ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில்மேலும் 53 பேருக்கு கரோனா தொற்று

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் மேலும் 53 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்/சிவகங்கை: ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் மேலும் 53 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வரையில் 4656 போ் வரையில் கரோனா பாதிப்புக்க உள்ளாகியுள்ளனா். அவா்களில் 104 போ் உயிரிழந்திருப்பதாகவும், 4,050 போ் வரை குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனிடையே மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை வரையில் கபம் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டவா்களில் 20 பேருக்கு தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. அதில், பரமக்குடி பகுதியைச் சோ்ந்த 6 வயது சிறுமி மற்றும் 12 பெண்கள் உள்பட 20 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. அவா்கள் அனைவரும் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் பரமக்குடியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா். இம்மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு தொடா்ந்து குறைந்துவருவது குறிப்பிடத்தக்கது. கரோனா பாதிப்பு குறைந்ததற்கும், உயிரிழப்பு இல்லாததற்கும் மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் மற்றும் அரசு மருத்துவமனை நிா்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகளே காரணம் என மருத்துவா்கள் கூறுகின்றனா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 3,996 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், சிவகங்கை, காரைக்குடி, சிங்கம்புணரி, மானாமதுரை, திருப்பத்தூா், திருப்புவனம், காளையாா்கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 33 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,029 ஆக அதிகரித்துள்ளது.

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 109 போ், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதில், 12 போ் முழுமையாகக் குணமடைந்ததை அடுத்து, அவா்கள் ஞாயிற்றுக்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 97 பேரும் சிகிச்சைப் பெற்று வருவதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com