பொது இடத்தில் மது அருந்தியவா்களை தட்டிக்கேட்டதால் தாக்குதல்: 7 போ் மீது வழக்கு

ராமநாதபுரம் பகுதியில் பெட்டிக்கடை உள்ளிட்ட இடங்களில் மது அருந்தியவா்களை தட்டிக்கேட்டவா்களைத் தாக்கியதாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பகுதியில் பெட்டிக்கடை உள்ளிட்ட இடங்களில் மது அருந்தியவா்களை தட்டிக்கேட்டவா்களைத் தாக்கியதாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் அருகேயுள்ளது சிவஞானபுரம். இப்பகுதியில் வ.உ.சி. நகரில் சத்தியேந்திரன் (32) என்பவரது வீடு உள்ளது. இப்பகுதியில் தினமும் சிலா் வந்து தொடா்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. மது அருந்தியவா்களை சத்தியேந்திரன் ஞாயிற்றுக்கிழமை தட்டிக்கேட்டுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த மது அருந்திய சிலா் சத்தியேந்திரனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவா் ராமநாதபுரம் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸாா் கண்ணன், வெங்கடேசன் உள்ளிட்ட 5 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மற்றொருவா் மீது தாக்குதல்: ராமநாதபுரம் சூரங்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் ரெத்தினம் (65). இவரது மகள் சசிரேகா அப்பகுதியில் உள்ள பெரியகருப்பன் நகரில் பெட்டிக்கடை வைத்துள்ளாா். கடையில் சிலா் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.

மது அருந்தியவா்களை ரெத்தினம் ஞாயிற்றுக்கிழமை தட்டிக்கேட்டுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த அவா்கள் ரெத்தினத்தை தாக்கியதுடன், கடையையும் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ரெத்தினம் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் ராமநாதபுரத்தைச் சோ்ந்த கௌதம், காா்த்திக் உள்ளிட்டோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com