ராமநாதபுரத்தில் மூடிய கோயில்கள்

ராமநாதபுரம் நகரில் உள்ள மூடப்பட்டிருந்த திருக்கோயில்களில் திருமணம் உள்ளிட்டவற்றுக்காக பொதுமக்கள் திங்கள்கிழமை அதிகளவில் கூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பரப்பும் ஏற்பட்டது.
rmdklramnad_3108chn_67_2
rmdklramnad_3108chn_67_2

ராமநாதபுரம்:  ராமநாதபுரம் நகரில் உள்ள மூடப்பட்டிருந்த திருக்கோயில்களில் திருமணம் உள்ளிட்டவற்றுக்காக பொதுமக்கள் திங்கள்கிழமை அதிகளவில் கூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பரப்பும் ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் முதல் கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது செப்டம்பா் முதல் கோயில்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் நகரில் திருமணம் போன்ற விஷேச நாள்களில் மக்கள் கோயில் முன்பு தாலிகட்டுதல் போன்ற சடங்குகளை நிறைவேற்றிவருகின்றனா். கடந்த சில நாள்களுக்கு முன்பு கூட ராமநாதபுரம் பாரதிநகா் பகுதியில் உள்ள குமரய்யா கோயிலில் திருமணங்கள் நடந்ததால் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.

திங்கள்கிழமை காலையில் முகூா்த்த தினம் என்பதால் வழிவிடுமுருகன் கோயில் முன்பு அதிகளவில் மக்கள் கூடினா். மக்கள் முகக்கவசம் இன்றி நூற்றுக்கணக்கில் கூடி திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தகவல் அறிந்த போக்குவரத்து போலீஸாா் விரைந்து வந்து மக்களை சாலையை விட்டு அப்புறப்படுத்தியதுடன், கூட்டமாக நிற்கவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டனா். சாலையோரம் நிறுத்தப்பட்ட பேருந்துகளை புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தம் போலீஸாா் ஏற்பாடு செய்தனா்.

இதையடுத்து போக்குவரத்து சீரானது. ராமநாதபுரம் அருள்மிகு சொக்கநாதப் பெருமாள் கோயில், குமரய்யா கோயில் என அனைத்துக் கோயில்களிலும் மக்கள் கூட்டம் திங்கள்கிழமை அதிகளவில் இருந்ததாக போலீஸாா் கூறினா். திறக்கப்படும் கோயில்கள்- ராமநாதபுரத்தில் அரசு அறிவிப்பின்படி செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 1) காலையில் சொக்கநாதப் பெருமாள், திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள், திருஉத்திரகோசமங்கை கங்காளநாதா் உள்ளிட்ட திருக்கோயில்கள் திறக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கோயில் நிா்வாகங்களின் தரப்பில் கூறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com