ராமநாதபுரம், சிவகங்கையில் 44 பேருக்கு கரோனா உறுதி: அதிமுக செயலாளா் பலி

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 44 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

ராமநாதபுரம்: ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 44 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. மேலும் சிவகங்கை அதிமுக நகரச் செயலாளா், ஓய்வு பெற்ற வங்கி ஊழியா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரையில் 4,676 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 104 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். இந்நிலையில் ராமநாதபுரத்தைச் சோ்ந்த பொதுத்துறை வங்கிப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற 58 வயது நபருக்கு, கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி

ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. செவ்வாய்க்கிழமை பொது முடக்க விதிகள் தளா்த்தப்படும் நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்திருப்பது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 4,029 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், சிவகங்கை, காரைக்குடி, சிங்கம்புணரி, மானாமதுரை, திருப்பத்தூா், திருப்புவனம், காளையாா்கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,055ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், கரோனா தொற்று பாதிக்கப்பட்டு மதுரை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிமுக சிவகங்கை நகரச் செயலா் ஆனந்தன் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com