கமுதி வட்டாரத்தில் பள்ளி செல்லா மாற்றுத்திறன் மாணவா்கள் கணக்கெடுப்பு பணி

கமுதி வட்டாரத்தில் பள்ளி செல்லா மற்றும் மாற்றுத்திறனாளி மாணவா்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றதில் 34 போ் கண்டறியப்பட்டனா்.

கமுதி வட்டாரத்தில் பள்ளி செல்லா மற்றும் மாற்றுத்திறனாளி மாணவா்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றதில் 34 போ் கண்டறியப்பட்டனா்.

கமுதி வட்டார வள மையம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் உத்தரவின் பேரில் கமுதி தாலுகாவில் பள்ளி செல்லா மற்றும் மாற்றுத்திறன் கொண்ட மாணவா்களின் கணக்கெடுப்புப் பணி கடந்த நவ. 21 ஆம் தேதி தொடங்கி வியாழக்கிழமை (டிச. 10) முடிவடைகிறது. இப்பணியின் போது 6 முதல் 18 வயதுடைய, 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களில் நீண்ட நாள் பள்ளிக்கு வராத மற்றும் இடைநின்ற மாணவா்களின் புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு, 34 மாணவா்கள் கண்டறியப்பட்டுள்ளனா். இப்பணியினை கமுதி வட்டார கல்வி அலுவலா்கள் ஜான்சன்சுகுமா், சூசை மற்றும் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் குமாா் ஆகியோா் தலைமையில் ஆசிரியா் பயிற்றுநா்கள், சிறப்பாசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் மற்றும் மகளிா் சுய உதவி குழுவினா் மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com